Published:Updated:

`டிராஃபிக் ரூல்ஸ் முதல் இளையராஜா இசை வரை..!' - கோவையை கலக்கும் அடடே சிக்னல்கள்

அடடே சிக்னல்கள்

சிக்னல் போட்டதும் `ஐயோ..!' என அலுத்து முகம் சுழிக்கும் தருவாயில், `அடடே!' என வியக்கும் வண்ணம் அழகிய இசை ஒலிக்கிறது. அது செவியினூடே வருடிச் சென்று... மனதை சற்று சாந்தப்படுத்துகிறது.

`டிராஃபிக் ரூல்ஸ் முதல் இளையராஜா இசை வரை..!' - கோவையை கலக்கும் அடடே சிக்னல்கள்

சிக்னல் போட்டதும் `ஐயோ..!' என அலுத்து முகம் சுழிக்கும் தருவாயில், `அடடே!' என வியக்கும் வண்ணம் அழகிய இசை ஒலிக்கிறது. அது செவியினூடே வருடிச் சென்று... மனதை சற்று சாந்தப்படுத்துகிறது.

Published:Updated:
அடடே சிக்னல்கள்

கோவை மாநகரப் போக்குவரத்து சிக்னல்களில் சாலைப் பாதுகாப்பு விதிகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இடை... இடையே இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இன்னிசையும் வாகன ஓட்டிகளின் காதுகளுக்கு விருந்தளிக்கின்றன.

கோவை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் சாலைப் பாதுகாப்பு அறிவுரையும், இசைக் கச்சேரி அரங்கேற்றமும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.

`டைம் ஆயிடுச்சு... டைம் ஆயிடுச்சு!' என டென்ஷனோடு சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சிக்னல் போட்டதும் `ஐயோ..!' என அலுத்து முகம் சுழிக்கும் தருவாயில், `அடடே!' என வியக்கும் வண்ணம் அழகிய இசை ஒலிக்கிறது. அது செவியினூடே வருடிச் சென்று... மனதை சற்று சாந்தப்படுத்துகிறது.

சிக்னல்
சிக்னல்

மேலும், வாகனம் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகளும் விளக்கப்படுகின்றன. சாலை விதிகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தும், விதிக்கப்படும் அபராதமும் விவரிக்கப்படுகின்றன.

சாலை விதிகளுடன், `படியில் பயணம் நொடியில் மரணம்', `குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்', `அதி வேகம் அதிக ஆபத்து... மித வேகம் மிக நன்று' போன்ற வசனங்களும் ஒலிக்கின்றன.

இந்தத் திட்டம் குறித்து கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் பணியிலிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவரிடம் பேசினோம். ``புதியதொரு முயற்சியின் மூலம் சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், சாலைப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரவும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் தற்போது பொதுமக்களிடையே போதிய ஒத்துழைப்பு இல்லை..." எனக்கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒன்வேயில் ஒருவர் ஒய்யாரமாக சென்றது அவருக்கு எரிச்சலைக் கிளப்பியது. அதோடு நாமும் அவரிடமிருந்து நடையைக் கட்டினோம்.

போக்குவரத்து
போக்குவரத்து

சரி காவல்துறையினரின் இந்த முயற்சி எப்படி இருக்கிறது என பொதுமக்களிடம் கருத்து கேட்டோம். ``சாலை விதிகளை பெரும்பாலானோர் புரிந்துகொள்ள இது நல் வாய்ப்பாக அமைகிறது. இசைக்கு கல்லும் கரையும் என்பது போல... மன அழுத்தத்துடன் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த இசை ஓர் அருமருந்தாக அமைகிறது. வெயிலால் அலுப்பு ஏற்பட்டாலும் இசையால் இன்பம் எய்துகிறோம். விதிகளையே தொடர்ந்து சொன்னால் சலிப்பு ஏற்படும். எனவே, அதைத் தடுக்க இசையை இடையில் கோத்த முயற்சி பாராட்டுதலுக்குரியது" என்று மனம் மகிழ்ந்தனர்.

ர.பிரேம்குமார் (மாணவப் பத்திரிகையாளர்)