Published:Updated:

ஊட்டி: தடையை மீறி ஆழ்துளைக் கிணறு; அத்துமீறும் காட்டேஜ்கள்! - நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

தடையை மீறி ஆழ்துளைக் கிணறு

அரசுத்துறையினர் கண்ணில்படாமல் ரிக் வண்டி எப்படி ஊட்டிக்கு வந்தது... அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் உதவியுடன் இது போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

ஊட்டி: தடையை மீறி ஆழ்துளைக் கிணறு; அத்துமீறும் காட்டேஜ்கள்! - நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

அரசுத்துறையினர் கண்ணில்படாமல் ரிக் வண்டி எப்படி ஊட்டிக்கு வந்தது... அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் உதவியுடன் இது போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

Published:Updated:
தடையை மீறி ஆழ்துளைக் கிணறு

நிலச்சரிவு அபாயம்கொண்ட நீலகிரி மாவட்டத்தில் பாறைகளை உடைக்கவும், ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், பொக்லைன் இயந்திரங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தடையை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல இடங்களில் சட்டவிரோதமாகப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தடையை மீறி ஆழ்துளை கிணறு
தடையை மீறி ஆழ்துளை கிணறு

அதிலும் குறிப்பாக ஆடம்பர தங்கும் விடுதிகள் கட்டுமானப் பணிகளில் பல விதிமீறல்கள் நடைபெற்றுவருவதாக தொடர் புகார்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில் ஊட்டி அருகிலுள்ள பட்டர்கொம்பை மலைச்சரிவில் தனியார் காட்டேஜ் நிர்வாகம் ஆழ்துளைக் கிணறு அமைத்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விதிமீறல் குறித்து நம்மிடம் பேசிய உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன், "தும்மனட்டி, பட்டர்கொம்பை பகுதியில் தனியார் காட்டேஜ் நிர்வாகம் தடையை மீறி போர்வெல் அமைத்துவருகிறது. போர்வெல் அமைக்கப் பயன்படுத்தப்படும் ரிக் வண்டிகள் சமவெளிப் பகுதியிலிருந்துதான் நீலகிரிக்குள் வர வேண்டும். அரசுத்துறையினர் கண்ணில் படாமல் ரிக் வண்டி எப்படி ஊட்டிக்கு வந்தது... அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் உதவியுடன் இது போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்த மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், யாரும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை"என்றார்.

தடையை மீறி ஆழ்துளை கிணறு
தடையை மீறி ஆழ்துளை கிணறு

இந்த விவகாரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``இந்த மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை இருக்கிறது. விதிமீறல் நடைபெற்றுவரும் இடத்தில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.