Published:Updated:

தேனி ஆண்டிபட்டியில் தலைதூக்கும் கள்ளச்சாராயம்..! - இரண்டே நாளில் 11 பேர் கைது

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

கடமலைக்குண்டு அருகே, இருவேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே உள்ள சிறைப்பாறை என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக நேற்று முன்தினம் போலீஸாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சோதனை செய்தனர். ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், சிலர் கள்ளச்சாராயம் காய்ச்ச இடத்தைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

`இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்!' - புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்
டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும்போது, “சாராயம் காய்ச்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல் பானைகளைக் கைப்பற்றியிருக்கிறோம். சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மொக்கப்பாண்டி, ராம்குமார், மனோஜ், பாண்டி, பாலமுருகன், ஜெயசீலன் ஆகிய 6 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்” என்றனர்.

இச்சம்பவம் நடந்து இரண்டு நாள்கள்கூட ஆகாத நிலையில், நேற்று, அதே கடமலைக்குண்டு அருகே, கருப்பையாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, ஐவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக போலீஸார் கூறும் போது, “கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக எஸ்.ஐ அருண்பாண்டிக்கு தகவல் கிடைத்தது. உடனே, ஒரு டீம் அமைத்து விசாரணையில் இறங்கினோம். கருப்பையாபுரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தார்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிச்சைமணி, ஈஸ்வரன், கருப்பையா மற்றும் முத்தாலம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ், தினேஷ், உப்புத்துறையைச் சேர்ந்த சாமிநாதன், மச்சக்காளை, சோலைத்தேவன்பட்டியைச் சேர்ந்த அழகுமலை ஆகியோரை பிடிக்க முயற்சி செய்தோம். ஈஸ்வரன், தினேஷ், மச்சக்காளை ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள ஐவர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 3 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்றனர்.

death
death
Representational image
`ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்!’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்

டாஸ்மார்க் மூடப்பட்டதால், புது விதமான போதைக்கு முயற்சி செய்து போதை ஆசாமிகள் மரணிப்பது தொடர்ந்துவரும் சூழலில், தேனி மாவட்டத்தில் தலைதூக்கும் கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு