Published:Updated:

``நானும் ஐ.ஏ.எஸ்-தான்" - நாகை கலெக்டரை வியக்கவைத்த 4 வயது சிறுவன்! | Viral Video

நாகப்பட்டினம்

``நானும் ஐ.ஏ.எஸ்-தான்" என்று கலெக்டரிடம் சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

``நானும் ஐ.ஏ.எஸ்-தான்" - நாகை கலெக்டரை வியக்கவைத்த 4 வயது சிறுவன்! | Viral Video

``நானும் ஐ.ஏ.எஸ்-தான்" என்று கலெக்டரிடம் சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மகளிர் தினத்தையொட்டி நடந்த விளையாட்டுப் போட்டியில் ``நானும் ஐ.ஏ.எஸ்-தான்" என்று கலெக்டரிடம் சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகள், நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தன. இதில் போலீஸாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே எறிபந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஆசிரியையான உமா மகேஸ்வரி தன் 4 வயது மகனையும் அழைத்து வந்திருந்தார்.

ஐ.ஏ.எஸ்
ஐ.ஏ.எஸ்

போட்டியில் கலந்துகொண்டவர்களின் பெயர் விவரங்களை கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் ``வணக்கம் சார்" என்று கலெக்டரைப் பார்த்து சத்தமாகக் கூறினான். உடனே கலெக்டர்  ``வணக்கம்" என்று சிறுவனைப் பார்த்து சொன்னார். இதனால்  மகிழ்ச்சியடைந்த சிறுவன் கலெக்டர் அருகில் சென்றதும் கலெக்டர், ``உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சிறுவன், ``கவின் மாறன் ஐ.ஏ.எஸ்" என்று பதிலளித்தான். அதைக் கேட்டு திகைத்துப்போன கலெக்டர், ``நீ கலெக்டராகி என்ன செய்யப்போறே?" என்று கேட்டபோது, ``நான் கலெக்டராகி உங்களைப்போல் மக்களுக்கு நல்லது செய்வேன். ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பேன்" என்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைக் கேட்டு வியந்துபோன கலெக்டர் அந்தச் சிறுவனைப் பாராட்டினார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதுதான் தற்போது வைரலாகிவருகிறது .

இது குறித்து கவின்மாறன் தாயார் ஆசிரியை உமா லட்சுமியிடம் பேசினோம். ``என் கணவர் ராஜா பிஸினஸ் செய்கிறார்.  என்னுடைய சிறு வயசுல நான் கலெக்டராக ஆசைப்பட்டேன். எங்க அம்மாவிடம்  அடிக்கடி சொல்வேன். ஆனா, முடியலை. ஆசிரியராகிட்டேன். அதை என்னோட மகன்கிட்ட சொல்லியிருக்கேன். அவன் மூணு வயசுல இருந்து நான்  கலெக்டராகப் போறேன்னு சொல்லிக்கிட்டே இருக்கான். அவன் பேரை யார் கேட்டாலும், 'கவின்மாறன் ஐ.ஏ.எஸ்'னுதான் சொல்லுவான். அதேபோலத்தான், கலெக்டர் சார் கிட்டயும் துணிச்சலாகப் பேசினான். எங்களுக்கே ஆச்சர்யமா இருந்தது. அதுக்குப் பிறகு கலெக்டர் சார் எங்களை வரவழைத்து கவின் மாறனுக்கு கல்வி தொடர்பான பொருள்களை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்து வாழ்த்தினாங்க.

ஐ.ஏ.எஸ்  உடன் சிறுவன்
ஐ.ஏ.எஸ் உடன் சிறுவன்

அதுபோல் இன்று நாகை மாவட்ட எஸ்.பி ஜவஹர் சார் எங்க மகனை அழைத்து வாழ்த்தி பரிசு தந்தாங்க. இந்தச் சம்பவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கு. அவனை ஐ.ஏ.எஸ் படிக்கவெக்கணும் என்று உறுதி எடுத்துள்ளோம். எல்லோருடைய ஆசீர்வாதத்தால் அது நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism