Published:Updated:

வேலூரைப் புரட்டிப்போடும் பருவமழை! - 3 பேர் மரணம்; 75 வீடுகள் சேதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் மழைக்குச் சேதமடைந்த வீடு
கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் மழைக்குச் சேதமடைந்த வீடு

மழை காரணமாக, அக்டோபர் மாதத் தொடக்கத்திலிருந்து தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 75 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய மாநில அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில், பருவமழை காரணமாக அக்டோபர் மாதம் 1-ம்தேதி முதல் நேற்று 7-ம் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. இந்த 38 நாள்களில், மழைக்கு மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்ர். மூன்று கால்நடைகளும் இறந்து மடிந்துள்ளன. நேற்றைய தினம் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும், இடைவிடாமல் பெய்துவரும் மழைக்கு நீர்நிலைகள் நிரம்பிவழிகின்றன.

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் - கன்சால்பேட்டை
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் - கன்சால்பேட்டை

அதேபோல், அக்டோபர் தொடக்கத்திலிருந்து தற்போது வரை 75 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 55 கூரை வீடுகள் பகுதி அளவும், எட்டுக் கூரை வீடுகள் முழுவதுமாகவும் இடிந்து சேதமடைந்துள்ளன. அதேபோல், எட்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவும், ஒரு ஓட்டு வீடு முழுவதுமாகவும் இடிந்து சேதமாயிருக்கின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று வீடுகள் சேதமடைந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, 27 நிவாரண முகாம்கள் இருக்கின்றன. தற்சமயம் வரை அவை செயல்பாட்டில் இல்லை. அதில், மக்களும் தங்கவைக்கப்படவில்லை என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு