Published:Updated:

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு; போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு; போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், முழுவதும் கள்ளச்சாராயம் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. பல கிராமங்களில் கள்ளச்சாராயத்தை ஊருக்குள் விற்பனை செய்வதற்கு ஏலமே விடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஒருசில காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடனேயே இது நடப்பதால், பல ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டிப் பறந்துவருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமல்லாமல், அதை விற்பனை செய்பவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் கள்ளச்சாராய வியாபாரியிடம் தொடர்பில் இருக்கும் காவல் அதிகாரிகள், காவலர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி உட்கோட்டம், சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவர் சாராய வியாபாரிகளிடம் ரகசியத் தொடர்பில் இருந்துவந்திருக்கிறார் என்பது விசாரணையில் உறுதியாகியிருக்கிறது.

கள்ளச்சாராயம் | கோப்புப் படம்
கள்ளச்சாராயம் | கோப்புப் படம்

மேலும், தனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய காரணத்தால், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அவர்களுக்குத் துறைரீதியிலான பரிந்துரையை அனுப்பினார் எஸ்.பி பகலவன். அதனடிப்படையில் டி.ஐ.ஜி அவர்கள் சின்ன சேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதற்கு முன்பு கள்ளச்சாராய வியாபாரிடம் லஞ்சம் வாங்கிய கீழ்குப்பம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலர் ஒருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பணியிடை நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன், “அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்துகொண்டு, காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருக்கிறார்.