Published:Updated:

காமராஜர் திறந்த பள்ளியின் அவலநிலை: `ஓடுகள் பெயர்ந்து; பூச்சுகள் உதிர்ந்து வகுப்பறையில் மழைநீர்!'

அரசு உயர்நிலைப் பள்ளி
அரசு உயர்நிலைப் பள்ளி ( நா.ராஜமுருகன் )

'கல்வி கண் திறந்த கடவுள்' என்று வர்ணிக்கப்படும் காமராஜரால் கரூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியின் கட்டடம் ஒன்று சிதிலமான நிலையில் இருப்பதாக, அந்த கிராம மக்கள் கவலைப்படுகிறார்கள்.

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் உள்ளது இந்த அரசு உயர்நிலைப் பள்ளி.

 சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம்
சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம்
நா.ராஜமுருகன்

இந்த பள்ளியில் உள்ள கட்டடம்தான், ஓடுகள் பெயர்ந்து, பலகைகள், ரீப்பர்கள் மோசமான நிலையில் இருக்கிறது. இதுகுறித்து, நம்மிடம் பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த இளங்கேஸ்வரன்,

கரூர்:முதல் இறுதிப் பயணம்;   மயானப் பாதைக்கான போராட்டத்தில் உயிரிழந்த பட்டியலினத்தவர்!-நடந்தது என்ன?

"இந்தக் கிராமம் காவிரி கரை ஒரமாக இருக்கிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலைமையில் உள்ளவர்கள்தான். கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், இவங்கதான் அதிகம் வசிக்கிறாங்க. அவர்கள், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் அளவுக்கு வருமானமில்லாதவர்கள்.

இளங்கேஸ்வரன்
இளங்கேஸ்வரன்
நா.ராஜமுருகன்

அதனால், இந்த அரசுப் பள்ளியில்தான் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க. ஆனால், இந்தப் பள்ளியின் பழைமையான கட்டடம் அங்கங்கே சிதிலமாகி இருக்கு. பத்தாம் வகுப்பு பிள்ளைகள் பள்ளிக்கு இப்போது வரத்தொடங்கியிருக்கும் நிலையில், இந்த 'ஓட்டை உடைசல்' கட்டடத்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து வந்திருமோனு பயமா இருக்கு" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய, இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான தோகை முருகன்,

"இந்தப் பள்ளி, கடந்த 1962 -ம் வருடம், காமராஜர் முதல்வராக இருந்தபோது சர்தார் வல்லபாய் படேல் நினைவாக திறக்கப்பட்டது. அவரே நேரடியாக வந்து இந்தப் பள்ளியைத் திறந்து வைத்தார். சுண்ணாம்பு காரைப் பூசப்பட்ட சுவர்மீது, மரச்சட்டங்களை வைத்து, சீமை ஓடுகள் வேயப்பட்ட நிலையில் இந்த கட்டடம் அப்போது கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டி கிட்டத்தட்ட 60 வருடங்கள் ஆகிறது. அதனால், வகுப்பறையினுள் ஆங்காங்கே சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து விழுந்துவிட்டன. அந்தக் கட்டடத்தில்தான், 6 முதல் 10 -ம் வகுப்பு வரை வகுப்புகள் நடக்குது. பல இடங்களில் கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து, மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீர் விழுகிறது. அதோடு, ஓடுகளை தாங்கி நிற்கும் மரச்சட்டங்களும் பல இடங்களில் கரையான் அரித்து, உளுத்துப்போய் உள்ளன. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்துடன் வகுப்பறைக்குள் அமரும் சூழல் ஏற்பட்டது. அதேபோல், வகுப்பறையின் முன்பக்க சுவர்களில் விரிசல் இடைவெளிகளில் கம்பி வலை அடித்துள்ளனர்.

Vikatan
காமராஜர் திறந்த பள்ளியின் அவலநிலை: `ஓடுகள் பெயர்ந்து; பூச்சுகள் உதிர்ந்து வகுப்பறையில் மழைநீர்!'
நா.ராஜமுருகன்

இதனால், பலத்த காற்று அடிக்கும்போது, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழும் இலை தழைகள் மற்றும் தூசுகள் வகுப்பறை முழுவதும் நிறைந்துவிடுகிறது. அதோடு, மழைநீரும் சாரலாக உள்ளே வந்துவிடுகிறது. இப்படி பல இன்னல்களால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று, எனது சொந்த பணத்தில் புதிய கட்டடம் கட்டித்தர நானே முன்வந்தேன். ஏற்கனவே, தொடக்கப்பள்ளிக்கு டைல்ஸ், காம்பவுண்ட் சுவரை உயர்த்துதல், புகளூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ 5 லட்சத்துக்கு கழிவறைகள் கட்டித் தந்துள்ளேன்.

அந்த அடிப்படையில், இந்தப் பள்ளிக்கும் ரூ. 60 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டித்தர அனுமதி வேண்டி, இரண்டு வருடத்துக்கு முன்பே பள்ளித் தலைமை ஆசிரியரை அணுகினேன். அவரும் இந்த விவகாரத்தை ஆர்வமா அப்போதைய மாவட்ட கல்வி அலுவலர் கவனத்துக்கு கொண்டுப்போனார். ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து, இந்தப் பள்ளியில் பணியாற்றிய மூன்று தலைமை ஆசிரியர்கள் மூலமாக, கட்டடம் கட்ட முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறையும் கல்வித்துறை அதிகாரிகள் அசட்டையா இருக்கிறார்கள். கடைசியாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நான்காவது முறையாகக் கல்வித்துறை அதிகாரியை அணுகியபோது, "நான் பொதுப்பணித்துறைக்கு அனுப்பிவிட்டேன். அவங்கதான் அந்த பழைய கட்டடத்தை இடிச்சு, புதிய கட்டடம் அமைய ஏற்பாடு செய்யணும்' எனச் சொன்னார்.

ஏசி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை; தனியார் பள்ளிகளிலிருந்து வந்து குவியும் அட்மிஷன்; அசத்தும் அரசுப்பள்ளி!
அரசு உயர்நிலைப் பள்ளி
அரசு உயர்நிலைப் பள்ளி
நா.ராஜமுருகன்

ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகினால், ஏதோ அது தங்களுக்கு வேண்டாத வேலை போல பேசுகிறார்கள். இன்றைக்குத் தமிழ்நாடு கல்வியில் இவ்வளவு முன்னேறியிருக்குன்னா, அதுக்குக் காரணம் காமராஜர் போட்ட பலமான அடித்தளம்தான். ஆனால், அவர் திறந்து வைத்த இந்தப் பள்ளியின் கட்டடத்தை என் சொந்த செலவில் கட்டித்தர நினைத்தும், அரசு இயந்திரம் மெத்தனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது" என்றார்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட கல்வித்துறை மட்டத்தில் விசாரித்தோம்.

"தோகை முருகன் அந்த பள்ளிக் கட்டடத்தைத் தனது சொந்த செலவில் கட்டித்தர முன்வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான். அதனால், அதற்காக எங்க சைடில் இருந்து அனுமதி கொடுத்து, அந்தக் கட்டடத்தை இடிக்க வலியுறுத்தி, பொதுப்பணிதுறைக்குக் கடிதம் கொடுத்திருக்கிறோம். இனி, அவங்கதான் அந்த கட்டடத்தை இடித்துத் தரணும்" என்றார்கள்.

சிதிலமடைந்த பள்ளி கட்டடம்
சிதிலமடைந்த பள்ளி கட்டடம்
நா.ராஜமுருகன்

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசினால்,

"அந்தக் கட்டடத்தை இடிக்கும் அளவுக்கு இப்போதைக்கு போதிய பொருளாதார வசதியில்லை. இருந்தாலும், விரைவில் அந்தப் பள்ளிக் கட்டடத்தை இடித்து, புதிய கட்டடத்தைக் கட்ட வழி அமைத்துத் தருவோம்" என்றார்கள். அரசுப் பள்ளிக்கு விடியல் எப்போது என்பதுதான் ஊர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு