Published:Updated:

`பள்ளியில் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தார்களா மாணவர்கள்? கண்டனமும் தலைமையாசிரியர் விளக்கமும்'

தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் மாணவர்கள்

மாணவர்களை ஆபத்தான தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

`பள்ளியில் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தார்களா மாணவர்கள்? கண்டனமும் தலைமையாசிரியர் விளக்கமும்'

மாணவர்களை ஆபத்தான தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

Published:Updated:
தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் மாணவர்கள்

அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியில் படிக்கும் மாணவர்களைக்கொண்டு ஆபத்தான சூழலில் மாடியிலுள்ள தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

ஆசிரியர்கள், மாணவர்கள்
ஆசிரியர்கள், மாணவர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எடமணல் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். நேற்று (11.10.2021) காலை பள்ளிக்கு வந்த மாணவர்களைக்கொண்டு செல்வராஜ், ராமமூர்த்தி உள்ளிட்ட சில ஆசிரியர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பள்ளி மாடியின் மீதுள்ள தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வகுப்பறையில் இருந்த குப்பைகளைக் கூட்டி வெளியே தள்ளிய மாணவர்கள், பள்ளி மாடியின்மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தனர் எனச் சொல்லப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆசிரியர்கள் முன்னிலையில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் செயலுக்கு பெற்றோர்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்திருக்கிறது.

தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் மாணவர்கள்
தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் மாணவர்கள்

இது குறித்து பள்ளித் தலைமையாசிரியர் முருகனிடம் விளக்கம் கேட்டோம். ``கடும் காற்று வீசியதாலும், மழை பொழிந்ததாலும் மேலே உள்ள வாட்டர் டேங்க் பைப் லைன் உடைந்துவிட்டது. அதைச் சரிசெய்வதற்காக பிளம்பர் வந்திருந்தார். மேலே ஏறுவதற்கு ஏணி இல்லாததால் பெஞ்ச்வைத்து அதன் வழியாக ஏறிச் சரிசெய்தார். அந்த பெஞ்சைப் பிடித்துக்கொள்வதற்கு இரண்டு மாணவர்கள் சென்றார்கள். பாதுகாப்புக்கு அருகிலேயே உடற்கல்வி ஆசிரியரும் இருந்தார். இந்தப் பணிக்கு மாணவர்களை அனுப்பியது தப்புதான் என்றாலும் சிலர் காழ்ப்புணர்ச்சியால் இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்திவிட்டார்கள்" என்றார்.