Published:Updated:

நாமக்கல்: 'நாட்டுக்கோழி, கொள்ளை ரேட்டு போகும் சார்' - 3 மாதங்களில் 250 கோழிகளைத் திருடிய இளைஞர்கள்

வெண்ணந்தூர்

ராசிபுரம் பகுதியில் இரண்டு இளைஞர்கள், கடந்த மூன்று மாதங்களில் விவசாயிகளின் 250 நாட்டுக்கோழிகளைத் திருடி, பொதுமக்களிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளனர். அவர்களின் கோழியை விலைக்கு வாங்கிவந்த கோழிக்கடைக்காரரும், சேர்ந்து கைதாகியிருக்கிறார்.

நாமக்கல்: 'நாட்டுக்கோழி, கொள்ளை ரேட்டு போகும் சார்' - 3 மாதங்களில் 250 கோழிகளைத் திருடிய இளைஞர்கள்

ராசிபுரம் பகுதியில் இரண்டு இளைஞர்கள், கடந்த மூன்று மாதங்களில் விவசாயிகளின் 250 நாட்டுக்கோழிகளைத் திருடி, பொதுமக்களிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளனர். அவர்களின் கோழியை விலைக்கு வாங்கிவந்த கோழிக்கடைக்காரரும், சேர்ந்து கைதாகியிருக்கிறார்.

Published:Updated:
வெண்ணந்தூர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகிலுள்ள கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதோடு, அங்கு வசிக்கும் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து, கோழி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் வளர்த்துவருகின்றனர். அந்த வகையில், ராசிபுரம் அருகிலுள்ள மின்னக்கல் கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் நாட்டுக்கோழிகளை வளர்த்துவருகின்றனர். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களில் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயத் தோட்டத்தில் வளர்க்கும் 250-க்கும் மேற்பட்ட கோழிகள், மர்மமாகக் காணாமல்போயிருக்கின்றன.

தேவராஜ்
தேவராஜ்

இதனால் கவலையடைந்த விவசாயிகள், 'கீரிப்பிள்ளை, நாய் எதுவும் கோழிகளைப் பிடித்துப்போயிருக்குமோ?' என்று குழம்பினர். ஆனால், கோழிகள் காணாமல்போவது தொடரவே, சந்தேகமடைந்த விவசாயிகள், இது குறித்து வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விவசாயிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார், விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், மின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் (47) என்பவரது வீட்டின் அருகில் கோழிக்கூண்டில் இருந்த கோழிகள் இரவில் சத்தம் போட்டிருக்கின்றன. இதனால், திடுக்கிட்டுப்போய் எழுந்த விவசாயி மாணிக்கம், டார்ச் லைட் சகிதம் கோழிக்கூண்டு அருகே விரைந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டார்ச் லைட்டை அவர் அடிக்க, அந்த வெளிச்சத்தில் இரண்டு பேர் கோழிகளைப் பிடித்து இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்குப்பையில் போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே மாணிக்கம், உரக்க சத்தம் போடவே, அவர் போட்ட சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்களைச் சுற்றிவளைத்து அவர்களை லாகவமாகப் பிடித்தனர். அதோடு, அவர்களை உடனடியாக வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார், 'கோழியை ஏண்டா திருடினீங்க?' என்று விசாரணை மேற்கொள்ள, 'நாட்டுக்கோழி கொள்ளை ரேட்டு போவுது சார். அதான், வருமானத்துக்காக கோழிகளைத் திருடினோம்' என்று சொல்லியுள்ளனர்.

கார்த்தி
கார்த்தி

போலீஸாரின் விசாரணையில், அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் பாலம்பட்டியைச் சேர்ந்த கார்த்தி (27), தேவராஜ் (42) என்பது தெரியவந்தது. அதோடு, இவர்கள் திருடிய கோழிகளை மின்னக்கல் கோடி காட்டில் கோழிக்கடை நடத்திவரும் ராஜியிடம் விற்பனை செய்ததாகக் கூறியுள்ளனர். இதனால், போலீஸார் ராஜியிடமும் விசாரித்தபோது, திருட்டுக்கோழிகளை வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதனால், கோழித் திருட்டில் ஈடுபட்ட கார்த்தி, தேவராஜ், திருட்டுக் கோழிகளை வாங்கிய ராஜி ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர். அதோடு, அவர்கள் கோழித் திருட்டுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும், வெண்ணந்தூர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.