Published:Updated:

`தண்ணீர் கொடுத்ததற்கு நன்றி' - மூதாட்டியின் காலில் விழுந்து நூதனமாக 8 பவுன் நகையைத் திருடிய பெண்!

தேடப்படும் குற்றவாளி

தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவரிடம் பெண் ஒருவர், தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, நன்றி சொல்வதுபோல் காலில் விழுந்து, எட்டு பவுன் நகையைத் திருடிக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`தண்ணீர் கொடுத்ததற்கு நன்றி' - மூதாட்டியின் காலில் விழுந்து நூதனமாக 8 பவுன் நகையைத் திருடிய பெண்!

தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவரிடம் பெண் ஒருவர், தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, நன்றி சொல்வதுபோல் காலில் விழுந்து, எட்டு பவுன் நகையைத் திருடிக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தேடப்படும் குற்றவாளி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நெட்டையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி எட்டம்மாள் (63). இந்தத் தம்பதியின் மகன் தியாகராஜன் (35). இவர், ஈரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்திவருகிறார். பழனியப்பன் மறைந்துவிட, அவரின் மனைவி எட்டம்மாள் மகன் தியாகராஜனோடு வசித்துவருகிறார். இந்த நிலையில், எட்டம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து தண்ணீர் கேட்டிருக்கிறார். எட்டம்மாளும் அந்தப் பெண்ணுக்கு பரிதாபப்பட்டு, தண்ணீர் கொடுத்திருக்கிறார்.

தண்ணீரை வாங்கிக் குடித்த அந்த அடையாளம் தெரியாத பெண், சடாரென எட்டம்மாளின் காலில் விழுந்து தண்ணீர் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு, தனக்கு மயக்கம்போல் வந்ததாகவும், என்ன நடந்தது என தெரியவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் தங்க நகை காணாமல்போயிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து எட்டம்மாள் நடந்த விவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தேடப்படும் குற்றவாளி
தேடப்படும் குற்றவாளி

இதையடுத்து, பரமத்தி வேலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவரின் புகாரின் அடிப்படையின், பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார், மூதாட்டி எட்டம்மாளிடம் நூதன முறையில் நகையை திருடிச் சென்ற மர்மப் பெண்ணைத் தேடிவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் எட்டம்மாளின் காலில் அந்த மர்மப் பெண் விழுந்தபோது, எட்டம்மாளுக்கு மயக்கம் வரும்படி எதையோ தூவி, அவர் மயங்கிய நேரத்தில் அவர் கழுத்திலிருந்த எட்டு பவுன் நகையைத் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த மூதாட்டியின் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பெண்ணை எட்டம்மாள் அடையாளம் காட்ட, போலீஸார், அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.