Published:Updated:

நீலகிரி: `பழங்குடிச் சிறார்களுக்கு கொரோனா; சிகிச்சைக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்; போராடிய அதிகாரிகள்!'

பழங்குடிச் சிறுவர்களுக்கு கொரோனா
பழங்குடிச் சிறுவர்களுக்கு கொரோனா

கூடலூர் அருகிலுள்ள புத்தூர்வயல் பழங்குடியின கிராமத்தில் 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 13 சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவல் நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களிடையேயும் பரவிவருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பழங்குடியின மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான பழங்குடிகள் சிகிச்சைக்கு வர மறுப்பதால், அவர்களைப் போராடி சம்மதிக்கவைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பழங்குடிச் சிறுவர்களுக்கு கொரோனா
பழங்குடிச் சிறுவர்களுக்கு கொரோனா

இந்தநிலையில், கூடலூர் அருகிலுள்ள புத்தூர்வயல் பழங்குடியின கிராமத்தில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 13 சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சிறுவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கச் சென்ற அரசு அலுவலர்களை ஊருக்குள் விடாமல் ஊர் மக்கள் தடுத்தனர். சிகிச்சைக்கு அனுப்ப முடியாது என வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் பல மணி நேரம் போராடி, பேச்சுவார்த்தை நடத்தி, இரவில் சம்மதிக்க வைத்து தன்னார்வலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர், ``பழங்குடிச் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றோம். தங்களுக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே இருப்பதாகவும், மருத்துவமனைக்கு வராமல் வீடுகளிலேயே தங்கிக்கொள்வதாகவும் தெரிவித்து குடியிருப்புக்குள் வர விடாமல் தடுத்தனர்.

கொரோனா
கொரோனா
AP Illustration/Peter Hamlin

காவல்துறையினர், வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் வந்து பாதிப்பு குறித்து எடுத்துரைத்து இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தி, தன்னார்வலர்கள் உதவியுடன் தொண்டு நிறுவன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு