Published:Updated:

நீலகிரி: சந்தைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! - கலங்கும் அதிகாரிகள்

அதிகாரிகள்
அதிகாரிகள்

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்குவந்தது முதல் நீலகிரியில் கூடும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனர்.

சர்வதேசச் சுற்றுலாதலமாகவும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களோடு எல்லையைப் பகிர்ந்துகொண்டதுமான நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர் அதிகாரிகள். இ-பாஸ் மற்றும் இ-ரிஜிஸ்ட்ரேஷன் முறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.

அதிகாரிகள்
அதிகாரிகள்

தற்போது இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இதைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளின் மூலம் மக்கள் கூடுவதைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள்களாகச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் காலையிலிருந்தே கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகின்றன. ஒரே இடத்தில் மக்கள் அளவுக்கு அதிகமாகக் கூடுகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.

நீலகிரி மாவட்ட கொரோனா கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அலுவலர் ஒருவர், ``செகண்ட் வேவ் ரொம்ப கடுமையா இருக்கு. இறப்பு விகிதமும் அதிகமாகுமோன்னு பயத்துல இருக்கோம்‌. மக்கள்கிட்ட இன்னும் விழிப்புணர்வு வரலை. இங்கே ஒரு நாளைக்கு நூறு கேஸ் அப்படிங்கறதே அதிகம்தான். இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு.

கூடலூர் கோவிட் வார்டு
கூடலூர் கோவிட் வார்டு

கூடலூர் பகுதியில தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. கடந்த முறை நிறைய ஸ்கூல்ஸ், கல்யாண மண்டபம் என கோவிட் வார்டுக்குத் தர முன்வந்தாங்க. இப்போ தயக்கம் காட்டுறாங்க. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே ரொம்ப சிரமமா இருக்கு. கூடலூர் மக்களுக்காக பந்தலூர்ல இருக்குற தேயிலைத் தோட்ட கார்டன் ஹாஸ்ப்பிட்டலை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு