Published:Updated:

பெரம்பலூர்: 'டூ-வீலரில் அம்பேத்கர் போட்டோ வைத்திருந்த இளைஞரைத் தாக்கிய நபர்கள் கைது!'

அவர்கள் என் சாதி பேரைச் சொல்லித்திட்டி என் வயிற்றில் பலமாக எட்டி உதைத்தனர். இதனால் சம்பவ இடத்திலேயே நான் மயக்கம் அடைத்தேன்

தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீஸாரிடம் புகாரளித்த அருள் பிரபுவிடம் பேசினோம்.”நான் பெரம்பலூர் மாவட்டம் ஓகளூர் கிராமத்தைச் சேர்ந்தவன். கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சமூகப் பணிகளிலும்,போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிரான போராட்டம், பூச்சிக் கொல்லிக்கு எதிரான ஆர்ப்பாட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லித் தொடர் போராட்டம் எனப் பல போராட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.

இவை தவிர்த்து சமூகப் பணிகளில் இயற்கை வேளாண்மை, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அவற்றை ஊக்குவிப்பது, விவசாயிகளுக்குச் சரியான விலை கிடைப்பதை உறுதி செய்வது என தொடர் பணிகளில் உள்ளேன் . நீர் மேலாண்மை குறித்த ஆர்வம் காரணமாக , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரியில் பற்றி ஆய்வு செய்து இருக்கிறேன்.

அருள் பிரபு
அருள் பிரபு

2016-2017ல் வறட்சியில் இறந்த அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் உணவுப் பொருட்கள், இலவச மாடுகள், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுகள், கிராம சபையைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று இன்னும் பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி அன்று கீழப்பெரம்பலூர் பகுதியில் எப்பொழுதும் போல சிறு தானியங்களைக் கொள்முதல் செய்யும் முதற் கட்ட பணிகளைச் செய்து கொண்டிருந்தேன். மதிய உணவுக்காக அக்கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயிலில் நான் என்னுடன் வேலை செய்யும் நண்பர் மற்றும் கூலியாட்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

அப்போது பள்ளியில் இருந்து நான்கு பேர் வந்து, "யாரு நீங்க, இங்க எதுக்கு உக்கார்ந்து சாப்பிடுறீங்க!' என்று மிரட்டும் தொனியில் கேட்டார். 'அண்ணே உங்க ஊர் விவசாயிகளோட தானியங்களைக் கொள்முதல் செய்ய வந்தோம்' என்று சொன்னபோது எனது டூவிலரில் இருந்த அம்பேத்கருடைய போட்டோவை பார்த்துவிட்டு மிகவும் மோசமாகத் திட்டத் தொடங்கினார். 'அண்ணே! நான் இங்குதான் வேலை பார்க்கிறேன். சாப்பிட்டு கிளம்பிடுறேன்!' என்று சொல்லியும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளாமல் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு என்னுடைய டூவிலைரை எட்டி உதைத்து சாவியைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

இப்படி செய்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்று நான் சொன்னதும். அவர்கள் என் சாதி பேரைச் சொல்லித்திட்டி என் வயிற்றில் பலமாக எட்டி உதைத்தனர். இதனால் சம்பவ இடத்திலேயே நான் மயக்கம் அடைத்தேன். பிறகு எனது அருகிலிருந்த நண்பர்கள் தண்ணீர் கொடுத்து என்னைத் தூக்கினர். பிறகு அவர்களே பட்டியலினத்தவர்கள் நம்மைத் தாக்கிவிட்டார்கள்.

சிறுதானியம் கொள்முதல்
சிறுதானியம் கொள்முதல்

பிறகு அவர்களே பட்டியலினத்தவர்கள் நம்மைத் தாக்கிவிட்டார்கள்.அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் வாருங்கள் என்று அவர்களது நண்பர்களுக்கு போன் பண்ணிக் கூப்பிட்டார்கள். அவர்களும் அருவாளோடு வந்து மிரட்டினார்கள். இதற்கு மேல் இங்கிருந்தால் பிரச்னையாகிவிடும் என்று பயந்துகொண்டு பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். அதன் பிறகு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி எடுத்துக்கொண்டு மேல் சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனை வந்ததோடு,குன்னம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வந்தேன்'' என்றார் பரிதாபமாக.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம்.”புகாரின் பெயரில் ரமேஷ்,தொட்டி என்கிற இரண்டு இளைஞர்களைக் கைது செய்து விசாரித்தோம். விசாரணையில் சாதிய பெயரைச்சொல்லித் தாக்கியதை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பின், அவர்களைப் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரியலூர் சிறையில் அடைத்துள்ளோம் என்றார். இம்மாவட்டத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் சாதிய மோதல்கள் நடந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் விழிப்போடு செயல்பட்டு வருகிறோம்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு