Published:Updated:

புதுக்கோட்டை: விசாரணைக்குச் சென்ற முதியவர்மீது தாக்குதல்! - தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விசாரணைக்குச் சென்ற முதியவர்மீது தாக்குதல்
விசாரணைக்குச் சென்ற முதியவர்மீது தாக்குதல்

தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணனை ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசி, அவரது கன்னத்திலும் அறைந்திருக்கிறார். அவருடன் வந்த உறவினர்கள், `சார் அவர் என்ன கொலைக் குத்தமா செஞ்சாரு? அவர் ஹார்ட் பேஷன்ட் சார்’ என்று கூறியிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). இவருக்கும் இவரின் பெரியப்பா மகன் ஆறுமுகம் என்பவருக்குமிடையே நீண்ட நாள்களாக இடத் தகராறு இருந்திருக்கிறது. இது தொடர்பாக, அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். இந்தநிலையில்தான், அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலர் முருகன் ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு அழைத்திருக்கிறார். ராதாகிருஷ்ணனும் அறந்தாங்கி காவல் நிலையம் வந்துவிட்டார்.

அவரின் உறவினர்கள் சிலரும் அவருடன் வந்தனர். இதையடுத்து தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது காவலர், ராதாகிருஷ்ணனின் விளக்கத்தைக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. ராதாகிருஷ்ணனுக்கும், தலைமைக் காவலர் முருகனுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசமடைந்த தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணனை ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசி, அவரது கன்னத்திலும் அறைந்திருக்கிறார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காவலர் முருகன்
காவலர் முருகன்

இந்தநிலையில், அவருடன் வந்த உறவினர்கள், ``சார், அவர் என்ன கொலைக் குத்தமா செஞ்சாரு... அவர் ஹார்ட் பேஷன்ட் சார், அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறியிருக்கின்றனர். ஆனாலும், ஆவேசம் அடங்காத தலைமைக் காவலர் முருகன், அங்கிருந்த காவலரைக் கூப்பிட்டு, `இவங்க எல்லாரையும் பிடிச்சு உட்காரவைங்க, ரிமாண்ட் பண்ணிடுவோம்’ என்று கூறுகிறார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையை அவரின் உறவினர் ஒருவர் வீடியோவாக எடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

`நீ ரொம்ப அழகா இருக்கே!’ - புகாரளிக்கச் சென்ற இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த புதுச்சேரி போலீஸ்?!

தலைமைக் காவலரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தநிலையில், தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் தரப்பில் வீடியோ ஆதாரங்களுடன் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இது பற்றி விசாரித்த எஸ்.பி நிஷா பார்த்திபன், உடனே அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றியதோடு, முருகன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்தான் முதியவரைக் கன்னத்தில் அறைந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அறந்தாங்கியில் விசாரணைக்குச் சென்றவரை, காவலர் தகாத வார்த்தையில் பேசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு