Published:Updated:

புதுக்கோட்டை: தொழிலில் நஷ்டம்; மதுபோதையில் சாமி சிலையை உடைத்த டெய்லர்!

சாமி சிலையை உடைத்த டெய்லர்
சாமி சிலையை உடைத்த டெய்லர்

தற்போது சுந்தரலிங்கம் என்பவர் கோயிலில் பூஜைகள் செய்துவருகிறார். நேற்று மாலை அவர் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே இருக்கிறது குளவாய்ப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சுந்தரலிங்கம் என்பவர் கோயிலில் பூஜைகளைச் செய்துவருகிறார். நேற்று மாலை அவர் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றார். இந்தநிலையில், இரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் சாமி சிலையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதிருக்கிறார். தொடர்ந்து அங்காளம்மன் சாமி சிலையை ஆயுதத்தைக் கொண்டு உடைத்திருக்கிறார். இதனால் சிலை இரண்டாகப் பிளந்திருக்கிறது. இதை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்து கோயில் பூசாரிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த வெண்கல சாமி சிலை! - அதிர்ச்சியில் கும்பகோணம்
உடைந்த சாமி சிலை
உடைந்த சாமி சிலை

பூசாரி விராலிமலை காவல் நிலையத்துக்கு இது பற்றித் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குளவாய்ப்பட்டி அருகேயுள்ள பேராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (41) என்பவர், மதுபோதையில் சாமி சிலையை உடைத்திருக்கிறார் என்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில், கண்ணன் அந்தப் பகுதியில் டெய்லராக இருக்கிறார் என்பது தெரிந்தது. அவருக்கு உமா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். டெய்லராக இருக்கும் கண்ணன் தொழிலில் நஷ்டமடைந்ததால், சாமி சிலையை உடைத்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது பற்றி வழக்கு பதிவு செய்து, கண்ணனைக் கைதுசெய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். அம்மன் சிலை உடைக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு