Published:Updated:

முள்வேலியில் பாயந்த மின்சாரம்; பரிதாபமாக உயிரிழந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள்!

மின் விளக்கு
மின் விளக்கு

தொழிலாளர்கள் இருவரும் துவைத்த துணியை முள்வேலியில் போடுவதற்காக முள்வேலியில் கை வைத்த போது எதிர்பாராத விதமாக முள்வேலியிலிருந்து மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் குமாரவேல்(45), பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுந்தரம்(65) இருவரும் சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள். வேலையை முடித்துவிட்டு இருவரும் கீரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள குளத்துக்குக் குளிக்கச் சென்றனர். குளத்துக் கரையைச் சுற்றிலும் இரும்பு முள்வேலி போடப்பட்டுள்ளது. பலரும் துவைக்கும் துணிகளை முள்வேலியில் போடுவது வழக்கம். அந்த வகையில் தான், தொழிலாளர்கள் இருவரும் துவைத்த துணியை முள்வேலியில் போடுவதற்காக முள்வேலியில் கைவைத்தபோது எதிர்பாராத விதமாக முள்வேலியிலிருந்து மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் சடலத்தையும் மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 2 மாணவிகள் பலி! - ஆலங்குடியில் சோகம்
இறந்து போன சுமைதூக்கும் தொழிலாளர்கள்
இறந்து போன சுமைதூக்கும் தொழிலாளர்கள்

தொடர்ந்து, இதுபற்றி விசாரித்து வருகின்றனர். இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது,

"இரவு நேரத்திலும் கோயில் குளத்தில் பலரும் குளிப்பதால், முள்வேலிகள் போட்டுப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதோடு, முள்வேலிக்கிடையே மின் விளக்குகளை அமைத்திருக்கின்றனர். மின் விளக்குகளுக்குச் சென்ற மின் வயர் வழியாக மின் கசிவு ஏற்பட்டு முள் வேலியில் பரவியிருக்கிறது. இது தெரியாமல் முள்வேலியைத் தொட்டு இருவரும் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கின்றனர். தற்போது மின்மாற்றியிலிருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இவர்களைப் பார்த்த பலரும் போதையில் கிடப்பதாக நினைத்துச் சென்றிருக்கின்றனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு