Published:Updated:

கவனக்குறைவாகக் குப்பையில் வீசப்பட்ட வைரக் கம்மல் - மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்

உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்

கவனக்குறைவாக, குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட வைரக் கம்மலை பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களின் நற்செயல் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பலமநேர் சாலையோரமிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு அருகில் வசிப்பவர் கல்பனா. இவர், தனது வீட்டில் தீபாவளி நோன்பு பூஜை செய்தபோது, சாமி படத்தின் முன்பு தன்னுடைய ஒரு ஜோடி வைரக் கம்மலைக் கழற்றிவைத்திருக்கிறார். பூஜை முடிந்ததும் கம்மலை எடுக்க மறந்துவிட்டார். இன்று காலை, அந்தப் பொருள்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு வீதியிலிருந்த குப்பைத்தொட்டியில் வீசியிருக்கிறார். சிறிது நேரத்துக்குப் பின்னரே கம்மலைக் காணவில்லை எனத் தேடியிருக்கிறார். குப்பைத்தொட்டியில் வீசிய கவர் நினைவுக்கு வந்ததால், உடனே அங்கு ஓடிச் சென்று பார்த்தார். அதற்குள் அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் தூய்மைப் பணியாளர்கள் வண்டியில் சேகரித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்
உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்

இதையடுத்து, குடியாத்தம் நகரமன்றத் தலைவர் சௌந்தரராஜனுக்குத் தகவல் தெரிவித்தார் கல்பனா. நகரமன்றத் தலைவர் போன் மூலம் தூய்மைப் பணியாளர்களைத் தொடர்புகொண்டு அந்தக் குப்பை வண்டியில் வைரக் கம்மல் கிடப்பதாகக் கூறினார். அதிர்ந்துபோன தூய்மைப் பணியாளர்கள், உடனடியாகக் கிடங்குக்கு வண்டியைக் கொண்டு சென்று குப்பைகளைக் கலைத்து வைரக் கம்மலை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். போன் மூலம் தகவல் தெரிவித்தவுடனேயே விரைந்து செயல்பட்ட நகரமன்றத் தலைவரின் செயலையும், அதைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து உரியவரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்களின் நற்பண்பையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.