Published:Updated:

விஜய் மக்கள் இயக்கம்: வேட்பாளருக்கு எதிராகப் பிரசாரம் செய்த நிர்வாகி நீக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜய் மக்கள் இயக்கத்தின் அறிவிப்பு
விஜய் மக்கள் இயக்கத்தின் அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கத்தில், காட்பாடி ஒன்றியப் பொருளாளராக இருந்த சுகுமார் இயக்கத்திலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், வேலூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்றங்களில் களமிறங்கியிருப்பது மொத்தமே 11 வேட்பாளர்கள்தான். இவர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அக்டோபர் 2-ம் தேதி குடியாத்தம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வந்தார். அப்போது, 20-க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ சென்ற புஸ்ஸி ஆனந்த்தை தேர்தல் விதியை மீறியதாகக் கூறி பறக்கும் படையினரும், போலீஸாரும் தடுத்து நிறுத்தினர். வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து, வேட்பாளர்களிடம் பெயருக்குத் தலைக்காட்டிவிட்டு புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து புறப்பட்டார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், வேலூர் விஜய் மக்கள் இயக்கத்துக்குள் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

`விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு இணையானது; கொடியை அகற்றுக!’- நிர்வாகிகளை அதிரவைத்த அதிகாரிகள்
குடியாத்தத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கார்கள்
குடியாத்தத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கார்கள்

காட்பாடி ஒன்றியப் பொருளாளராக இருக்கும் சுகுமார் என்பவர் மக்கள் இயக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டுவந்ததாகக் கூறி இயக்கத்திலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் உட்பட அவர் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. சுகுமாருடன் இயக்க நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று வேலூர் மாவட்டத் தலைவர் ஆர்.வேல்முருகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து, விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகனிடம் கேட்டபோது, ``சீட் கிடைக்காத கோபத்தில், இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து சுகுமார் பிரசாரம் செய்திருக்கிறார். இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறி அவர் செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு