Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: தவறான வேட்பாளர் பெயர்; மன்னிப்பு கோரிய தேர்தல் அதிகாரிகள்!

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உள்ளாவூர் கிராம ஊராட்சியில் வேட்பாளரின் பெயர் வாக்குச் சீட்டில் தவறாக அச்சடிக்கப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர் வாலாஜாபாத் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றிருக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். சில பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவும் செய்தனர். இந்நிலையில், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாவூர் கிராம ஊராட்சி உள்ளது. இந்த கிராம ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவிருந்தது.

வாக்கு மையம்
வாக்கு மையம்

தேர்தல் தொடங்கியதும், ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் த.லட்சுமி என்பவரின் பெயர் தனலட்சுமி என்று வாக்குச்சீட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த புகாரை அடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வேட்பாளரின் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குச் சீட்டில் மை கொண்டு பெயர் திருத்தும் செய்யப்பட்டது. ஆனால், வேட்பாளரின் தரப்பு இதனை ஏற்க மறுத்தது. இந்த தவறால் அவரின் வெற்றி பாதிக்கும் என்று லட்சுமி குற்றம் சாட்டினார். தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப் பட்டிருந்ததால் அங்கு வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் பதற்றமான சூழல் நிலவியது.

வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளி
வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளி
புதுவை - விழுப்புரம்: 15 நாள்களில் 4 மடங்கு அதிகரித்த மதுபான கடத்தல்! உள்ளாட்சித் தேர்தல் எதிரொலியா?

கடைசியாகத் தேர்தல் அதிகாரிகள் நடந்த தவற்றைச் சுட்டிக்காட்டி மன்னிப்பு கடிதம் வழங்கினார். இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெறத் தொடங்கியது. மதியம் மூன்று மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 58 சதவிகிதம் வாக்குப் பதிவு நடந்திருந்தது. அதே நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் போன்ற எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு