Published:Updated:

புதுக்கோட்டை அரசு ஒப்பந்ததாரர்... 3 நாள்களாக நடைபெற்ற சோதனை; சிக்கிய ஆவணங்கள்?! - ரெய்டு பின்னணி!

முக்கிய ஆவணங்கள்

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சி, தற்போதைய தி.மு.க ஆட்சி என தமிழகம் முழுவதும் ஊர் பெயர்ப் பலகை வைத்தல், சாலையில் பிரதிபலிப்பு பலகை வைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்துவருகிறார்.

ஒப்பந்தப் பணி எடுத்துச் செய்ததில் தரமற்ற பொருள்களை உபயோகப்படுத்தியதும், வரி ஏய்ப்பு செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் வந்த புகாரின்பேரில், புதுக்கோட்டை பெரியார் நகரிலுள்ள பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 12-ம் தேதி சோதனையைத் தொடங்கினர். விடிய விடிய ரெய்டு நடைபெற்ற நிலையில், 13-ம் தேதியும் தொடர்ந்தது.

புதுக்கோட்டை அரசு ஒப்பந்ததாரர்... 3 நாள்களாக நடைபெற்ற சோதனை; சிக்கிய ஆவணங்கள்?! - ரெய்டு பின்னணி!

இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில், 14-ம் தேதியும் ரெய்டு தொடர்ந்தது. இதற்கிடையே கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்துவரும் பாண்டித்துரை புதுக்கோட்டைக்கு வரவைக்கப்பட்டார். அலுவலகத்தில் அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, புதுக்கோட்டையிலுள்ள அவரின் வீட்டுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களின் கோப்புகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மேலும், கட்டுக்கட்டாகப் பணம், நகை உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களைக் கைப்பற்றிய நிலையில்தான், பாண்டித்துரையை வரவைத்து விசாரணையை நடத்தியிருக்கின்றனர் எனவும் சொல்லப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அட்டைப்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு, மூன்றுக்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளை வேனில் ஏற்றிச் சென்றனர். இதேபோல், அதே பகுதியிலுள்ள பாண்டித்துரையின் மேலாளர் பீட்டர் என்பவரின் வீடு, சிப்காட் பகுதியில் அமைந்துள்ள இரண்டு தொழிற்சாலைகளிலும் நடைபெற்ற சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறையில் ரோடுரோலர் ஓட்டுநர் பணி செய்துவந்த இவரின் தந்தை, கடந்த சில் ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், வாரிசு அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை உதவியாளர் பணி, அதன் பிறகு உதவிக் கோட்ட அலுவலகத்தில் உதவியாளர் பணி கிடைத்திருக்கிறது. ஆனாலும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரராகியிருக்கிறார்.

புதுக்கோட்டை அரசு ஒப்பந்ததாரர்... 3 நாள்களாக நடைபெற்ற சோதனை; சிக்கிய ஆவணங்கள்?! - ரெய்டு பின்னணி!

கோயம்புத்தூரில் வசித்துவரும் இவர், புதுக்கோட்டையில் மட்டுமல்லாமல், கோவையிலும் பல்வேறு சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார்.

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.