கோவை மாநகரில் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகம் இயங்கிவருகிறது. வடவள்ளி, அவிநாசி சாலை, சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் அந்த உணவுகத்துக்கு கிளைகள் உள்ளன. இந்நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனடிப்படையில், இன்று காலை முதல் அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
ஆனந்தாஸ் உணவகம், ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ், அலுவலகம், நிறுவனத்தின் இயக்குநர்கள், உறவினர்கள் வீடுகள் என்று சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

முன்னதாக வடவள்ளி பகுதியிலுள்ள கிளையில் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது உணவக ஊழியர்கள், அவர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள் அதற்கு மறுத்ததாகச் சொல்லப்படுகிறது, இதனால் உணவகம் தரப்பிலிருந்து போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டது. போலீஸார் அங்கு விரைந்ததும், அது வருமான வரித்துறை அதிகாரிகள்தான் என்று உறுதிசெய்யப்பட்டது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் ஆனந்தாஸ் உணவகங்கள் காலை முதல் பரபரப்பாகக் காணப்படுகின்றன. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர்!