Published:Updated:

`பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களின் கவனத்துக்கு... இனி அபராதம், 500 ரூபாய்!’ - தமிழக அரசு

கொரோனா முகக்கவசம்
News
கொரோனா முகக்கவசம் ( vikatan )

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வலம்வருபவர்களுக்கு அபராதத்தை உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா வேகமாகப் பரவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் தொடர்ந்து இருந்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொங்கல் பண்டிகைக் காலத்தில் தொற்றுப் பரவல் அதிகரிக்காமல் இருக்க, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகையை ரூ.200 என்பதிலிருந்து ரூ.500-ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று காலை செய்தியாளர் சந்திப்பில், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``டெல்டா வைரஸ் பாதிப்பின்போது 25-30% வரை மருத்துவமனை வசதி தேவைப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பில் 5 - 10 % வரைதான் மருத்துவமனை வசதி தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் தமிழகத்தில் போதுமான அளவு உள்ளது. மேலும் கூடுதல் தடுப்பூசி கோரி மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார் அவர்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

மேலும், “சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் இருப்பதை உணர்ந்தால் அவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒமைக்ரான் மூக்கு மற்றும் தொண்டையில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால், யாரும் அலட்சியம் காட்டக் கூடாது. முகக்கவசம் அணிவதால் நோய்த் தொற்றிலிருந்தும் , நோய் பரவலிலிருந்தும் தப்பிக்க முடியும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz