Published:Updated:

ஏலத்துக்கு வந்த சரவணா ஸ்டோர்ஸின் சொத்துகள்... என்ன நடக்கிறது?

தி.நகர்
News
தி.நகர்

மார்ச் 17-ம் தேதி ஏலம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published:Updated:

ஏலத்துக்கு வந்த சரவணா ஸ்டோர்ஸின் சொத்துகள்... என்ன நடக்கிறது?

மார்ச் 17-ம் தேதி ஏலம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.நகர்
News
தி.நகர்

சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படவிருப்பதாக சென்னையில் உள்ள இந்தியன் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருப்பது சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன்று பல்வேறு கிளைகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் விற்பனையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

பலரும் வியந்து பார்க்கும் சரவணா ஸ்டோர்ஸுக்கு இந்தியன் வங்கியின் வாராக் கடன் வசூலிப்பு பிரிவிலிருந்து விற்பனை நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸின் பங்குதாரர், சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் உரிமையாளர் பல்லாக்கு துரை பெயருக்கு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள 4,800 சதுர அடியில் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) கடையும், 288,08,67,490 ரூபாய் கடனுக்காக விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 17-ம் தேதி ஏலம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்
சரவணா ஸ்டோர்ஸுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்

இதுதொடர்பாகக் கூடுதல் தகவல்பெற சென்னையில் உள்ள, இந்தியன் வங்கியின் வாராக்கடன் வசூலிப்பு பிரிவுக்கு தொடர்புகொண்டோம், ``ஏலம் அறிவிப்பு விடப்பட்டுள்ளது உண்மைதான் என்று தெரிவித்த ஓர் அலுவலர், இதுதொடர்பான தகவல்கள் வெவ்வேறு அலுவலர்களிடம் இருக்கும். தற்போது வங்கி ஸ்ட்ரைக் என்பதால் அதுதொடர்பான விரிவான தகவல்கள் கிடைக்காது" என்றார்.