Published:Updated:

தண்ணீரின்றி தவிக்கும் காட்டுமாடுகள்; தாகம் தீர்க்குமா வனத்துறை?

காட்டுமாடுகள்

``கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள எந்த நீரோடையிலும் காட்டுமாடுகள் நெருங்கவே முடியாதபடி பாதைகள் மறிக்கப்பட்டுள்ளது. நீர் அருந்த வர கூடிய காட்டுமாடுகள் நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல் சாலைகளிலும் குடியிருப்பு அருகிலும் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய துயரம் ஏற்பட்டுள்ளது."

தண்ணீரின்றி தவிக்கும் காட்டுமாடுகள்; தாகம் தீர்க்குமா வனத்துறை?

``கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள எந்த நீரோடையிலும் காட்டுமாடுகள் நெருங்கவே முடியாதபடி பாதைகள் மறிக்கப்பட்டுள்ளது. நீர் அருந்த வர கூடிய காட்டுமாடுகள் நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல் சாலைகளிலும் குடியிருப்பு அருகிலும் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய துயரம் ஏற்பட்டுள்ளது."

Published:Updated:
காட்டுமாடுகள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், கட்டுமானங்கள், வளர்ச்சிப் பணிகள் போன்ற பல காரணங்களால் வனப்பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. காடுகளை இழந்துத் தவிக்கும் யானை, காட்டுமாடு, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால், மனித-வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.

காட்டுமாடு
காட்டுமாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், நீலகிரி வனக்கோட்டக் காப்புக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் இருந்து வெளியே வரும் காட்டுமாடுகள் நீர் நிலைகளுக்குச் செல்ல முடியாதபடி அவற்றின் பாதைகள் தடைப்பட்டிருப்பதால் போக்கிடம் தெரியாமல் தவித்து வருவதாக வேதனைப்படுகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பேசிய கேத்தி பகுதியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் ஹரிஹரன், ``நீலகிரி வனக் கோட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளன. தற்போது மழையின்றி பனிக்காலம் தொடர்வதால் நீர் நிலைகளில் இருப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதனால், நீர் நிலைகளைத் தேடி காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வனத்தை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்கள், விளைநிலங்கள் கட்டடங்களால் சூழப்பட்டுள்ளன.

காட்டுமாடுகள்
காட்டுமாடுகள்

வறட்சி காலங்களில் காட்டுமாடுகள் நீர்நிலைகளுக்குச் செல்லப்‌ பயன்படுத்தி வந்த பாதைகள் பெரும்பாலும் மின் வேலிகளாலும், முள் வேலிகளாலும் தடுக்கப்பட்டுள்ளன. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி நீர் நிலைகளுக்குச் செல்வதிலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள எந்த நீரோடையிலும் காட்டுமாடுகள் நெருங்கவே முடியாதபடி பாதைகள் மறிக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீர் அருந்த வரக் கூடிய காட்டுமாடுகள் நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல் சாலைகளிலும், குடியிருப்பு அருகிலும் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய துயரம் ஏற்பட்டுள்ளது. கோடை காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம். எனவே, வனத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Indian Gaur
Indian Gaur

இந்த விவகாரத்தை வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். ``இது தொடர்பான புகார்கள் ஏற்கெனவே வந்துள்ளன. மாவட்ட நிர்வாகித்தின் ஒத்துழைப்புடன் களத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism