Published:Updated:

`இழப்பீடு வேண்டாம்.. உங்கள் அலட்சியத்தால்தான் சாகிறோம்!' - வனத்துறையிடம் கொதித்த கோத்தகிரி மக்கள்

பார்வதி உறவினர்கள்
பார்வதி உறவினர்கள்

கோத்தகிரியில் தேயிலை பறித்துவிட்டு உணவுக்காக வீட்டுக்கு நடந்து சென்றபோது காட்டுமாடு தாக்கியதில் பெண் ஒருவர் குடல் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஜக்கனாரை கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. 65 வயதான இவர் தனது தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

உயிரிழந்த பார்வதி
உயிரிழந்த பார்வதி

மதிய உணவுக்காக தோட்டத்திலிருந்து வீட்டுக்கு மதியம் சுமார் 2 மணியளவில் நடந்து சென்றுகொண்டிருக்கையில் புதர் மறைவில் இருந்த காட்டுமாடு ஒன்று பார்வதியின் முதுகுப் பகுதியில் தனது கொம்பால் தாக்கியுள்ளது.

இதில் பார்வதி தூக்கியெறியப்பட்டதுடன் பலத்த காயம் ஏற்பட்டு, குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உயிரிழந்த பார்வதி
உயிரிழந்த பார்வதி

வனத்துறையினர் பார்வதியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

வனவிலங்குகள் எதிர்கொள்ளலில் உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவந்த வனத்துறை அதிகாரியை முற்றுகையிட்ட உறவினர்கள், ``எங்களுக்கு இழப்பீடு வேண்டாம். காட்டுமாடுகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுங்கள். உங்கள் அலட்சியத்தால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன" என மருத்துவமனை வளாகத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமாடு
காட்டுமாடு

ஊருக்குள் வரும் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்த பின்னரே சமாதானம் அடைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு