Published:Updated:

குன்னூர்: `உங்கள் உதவிக்கு எந்த கைம்மாறும் ஈடாகாது!" - நஞ்சப்பா சத்திரம் மக்களை நெகிழவைத்த ராணுவம்

மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குப் பாராட்டு
News
மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குப் பாராட்டு

உங்களின் உடல்நலனுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர் அடங்கிய குழுவினரை உங்கள் கிராமத்துக்கு அனுப்புவோம். அடுத்த ஆண்டு, டிசம்பர் வரை உங்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பை ராணுவ மருத்துவமனை ஏற்கும்.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உட்பட 13 பேர், குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் கடுமையான தீக்காயங்களுடன் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு

இந்தக் கோர விபத்து நாட்டு மக்களைப் பேரதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அதேவேளையில், விபத்தின்போது அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களின் சேவை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராணுவம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என மத்திய, மாநில அரசுகளின் இயந்திரங்கள் போட்டி போட்டு நஞ்சப்பா சத்திரம் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்துவருகின்றனர். மீட்புப்பணியில் திறம்பட செயல்பட்ட அரசுத்துறையினருக்கும், நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ராணுவத் தரப்பில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெல்லிங்டன் ராணுவ மையத்திலிருக்கும் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில், தக்‌ஷிண் பாரத் ராணுவப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அருண் கலந்துகொண்டு சிறப்பாகச் செயல்பட்ட அரசுத் துறையினரை கௌரவித்தார். இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு அவர்களுடன் கலந்துரையாடினார்.

மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குப் பாராட்டு
மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குப் பாராட்டு

அந்த மக்களிடம் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அருண், ``நீங்கள் செய்த உதவிக்கு எத்தகைய கைம்மாறும் ஈடாகாது. ராணுவத்தால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்து கொடுப்போம். உங்களின் உடல்நலனுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர் அடங்கிய குழுவினரை உங்கள் கிராமத்துக்கு அனுப்புவோம். அடுத்த ஆண்டு, டிசம்பர் வரை உங்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பை ராணுவ மருத்துவமனை ஏற்கும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெலிகாப்டர் விபத்தை முதலில் பார்த்த கிருஷ்ணசாமி, விபத்தை அரசுக்கு தெரிவித்த குமார் இருவருக்கும் நிவாரண உதவிகளோடு வெகுமதிகளையும் பரிசளித்தார்.

மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குப் பாராட்டு
மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குப் பாராட்டு

மேலும் விபத்தின்போது, சிறப்பாகச் செயல்பட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் இந்திய ராணுவத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.