Published:Updated:

ஆழ்துளைக் குழாய்; ஆபத்தான கிணறு - இளைஞர்களுடன் களமிறங்கிய புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர்

புதுக்கோட்டையில், ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து, இளைஞர்கள் உதவியுடன் மூடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.

ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்
ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் தன்னுடைய வீட்டுக்கு அருகே இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் பரிதாபமாக உயிரிழந்தான். 4 நாள்கள் தொடர் மீட்புப் பணிகள் தோல்வியடைந்து, கடைசியாகச் சடலமாக மீட்கப்பட்டான். இனி, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடந்துவிடக் கூடாது என்பதற்காக, தமிழகம் முழுவதும் மூடப்படாமல், இருக்கும் ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகளை அரசு அலுவலர்கள் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்
ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்

இதனிடையே, சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைத் தற்காலிகமாக மூடி வருகின்றனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் ஆய்வாளர் பரத் சீனிவாசன் கடந்த 2 நாள்களாகவே வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டுபிடிக்கிறார்.

ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்
ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்

காவல் ஆய்வாளர் பரத் சீனிவாசனிடம் பேசினோம், "சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த அடுத்த நாளே வடகாடு அருகே அணவயல் அரசுப்பள்ளிக்கு அருகே மூடப்படாமல், ஆபத்தான நிலையில் ஒரு ஆழ்துளைக் கிணறு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மாணவர்கள் விளையாடும் மைதானத்துக்கு அருகேயே அந்த ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் இருந்துச்சு. உடனே அந்தப் பகுதி இளைஞர்களின் உதவியோடு தற்காலிகமாக மூடிவிட்டோம்.

அதுக்கப்புறம், அந்த ஊர் ஊராட்சி அலுவலர்கிட்ட சொல்லி இருக்கோம். பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல இந்த ஆழ்துளைக் கிணறு ரொம்ப நாளா இருந்திருக்கு. இதுவரைக்கும் யாருக்கும் ஆபத்து இல்லை. இனி வந்திரக்கூடாதுல்ல, அதனால, தான் உடனே மூட நடவடிக்கை எடுத்தேன். அப்பத்தான், வடகாட்டுக்கு பக்கத்துல இருக்க கிராமத்துக்கு எல்லாம் போய் இளைஞர்கள் உதவியோட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவோம்னு முடிவு பண்ணேன்.

ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்
ஆழ்துளைக் கிணறுகளை மூட களம் இறங்கிய இன்ஸ்பெக்டர்

அதன்படியே, நிறைய ஆழ்துளைக் கிணறுகள் திறந்த நிலையிலிருந்தன. 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைத் தற்காலிகமாக மூடியுள்ளோம். இந்தக் கிராமங்களில் ஆபத்தான நிலையில் சில கிணறுகளும் இருக்கு. அவற்றையும் மூட உள்ளூர் ஊராட்சி அதிகாரிகள் கிட்டயும் அரசியல் வாதிகள் கிட்டயும் சொல்லி இருக்கேன். தொடர்ந்து, இதைக் கண்காணிக்கவும் உள்ளேன்" என்றார்.