Published:Updated:

`63 ஆண்டுகள்... 37 மாவட்டங்கள்!’- இது தமிழ்நாடு வரைபட வரலாறு #VikatanInfographics

தமிழ்நாடு என்ற மாநிலம் உதயமானதிலிருந்து இப்போது வரையிலுமான காலகட்டத்தில் இங்கு நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள், அதனால் தமிழக வரைபடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த தொகுப்பே இந்தக் கட்டுரை.

தமிழ்நாடு
தமிழ்நாடு

`சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா' என்கிற பாடல் தமிழர்களின் மனதில் தனித்த இடம்பிடித்தது. சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு சென்டிமென்ட் பாடலாகவும் சமயங்களில் நாஸ்டால்ஜியா பாடலாகவும் இருப்பது. சொந்த ஊர் என்கிற சென்டிமென்ட்டும் தமிழர்களுக்கு அதிகம். சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை வெளியூரில் சந்திக்க நேர்ந்தால் அறிமுகமே இல்லையென்றாலும் அவரிடம் பேச வேண்டும் என நம் மக்களுக்கு சென்டிமென்ட் உண்டு.

அதிலும் ஒரே மாவட்டத்துக்காரர்கள் என்றால் அதிலே உருவாகிற நட்பும் உறவும் அலாதியானது. ஒரு காலத்தில் ஒரே மாவட்டமாக இருந்தவர்கள் இப்போது வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக மாறுவது தவிர்க்க முடியாததாகவுள்ளது. மக்கள் தொகைப் பெருக்கமும், மக்களுக்கான தேவையும், நிர்வாகரீதியான கட்டமைப்புகளும் புதிய மாவட்டங்கள் பிரிப்பதற்கு முக்கியக் காரணங்களாகவுள்ளன. அந்த வகையில் ஏற்கெனவே 32 மாவட்டங்களைக் கொண்டிருந்த தமிழகத்தில் இந்த ஆண்டில் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்கி இருக்கிறது தமிழக அரசு. உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்காகவே புதிய மாவட்டங்கள் பிரிப்பது, நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதாக அரசியல் அரங்கில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும் புதிய மாவட்டங்கள் பிரிப்பு என்பது பெரும்பான்மை மக்களின் தேவையாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது என்பதே யதார்த்தம். ஒருபுறம் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு ஒருசாரர் மகிழ்ச்சி தெரிவித்தாலும், சொந்த ஊர் இரண்டாக பிரிக்கப்படுவதற்காக வருத்தம் தெரிவிக்கும் மக்களும் இல்லாமல் இல்லை.

தமிழ்நாடு
தமிழ்நாடு

மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதுமே சமூக ஊடகங்களில் அது தொடர்பான மீம்கள் உலவத் தொடங்கின. மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு நிர்வாக ரீதியாக பல காரணங்கள் அரசுத் தரப்பால் சொல்லப்படுகிறது. ஆனால், அடித்தட்டு மக்களால் அது சென்டிமென்டான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது மட்டுமல்ல 1956-ல் மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டதிலிருந்தே பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

1956-ம் ஆண்டு 13 மாவட்டங்கள் இருந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த காலங்களில் தமிழகம் எவ்வாறெல்லாம் மாறியிருக்கிறது என்பது பற்றிய நாஸ்டால்ஜியா பயணமே இந்த வரைபடத் தொகுப்பு. தமிழகத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க உதவும் இந்த `இன்டராக்டிவ்’ உங்கள் பார்வைக்கு...

`ஈழத்தமிழர்' துரோகம், பிண அரசியல்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.கவின் பதில் என்ன?
தமிழ்நாடு
தமிழ்நாடு