Election bannerElection banner
Published:Updated:

`பன்றி தழுவும் போட்டி!' - தேனியில் ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி

பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி

ஜல்லிக்கட்டுபோலவே, பல்வேறு கட்டுப்பாடுகளுடன், பன்றி தழுவும் விழா தேனியில் கொண்டாடப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தேனி நகர் பகுதியில் அமைந்திருக்கிறது குறமகள் வள்ளிநகர் குடியிருப்புப் பகுதி. இங்கு, நேற்று பன்றி தழுவும் விழாவை நடத்தியிருக்கிறார்கள் வனவேங்கைக் கட்சியினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், தேனி நகர்ப் பகுதியில் பன்றி தழுவும் போட்டி நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது.

பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி
ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை செல்வராணி!

பன்றி தழுவும் போட்டி பற்றி மேலும் விவரங்கள் அறிய வனவேங்கைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் உலகநாதனிடம் பேசினோம். ``விவசாய உழவுக்கு காளை மாடுகள் பயன்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால், சங்ககால குறிஞ்சி நிலத்தில் விவசாய உழவுக்குப் பன்றிகள் பயன்படுத்தப்பட்டன.

இதற்கான ஆதாரம் புறநானூற்றில் பாடான் திணையில் உள்ளது. இதை மையமாக வைத்துதான் பன்றி தழுவும் போட்டியைத் திட்டமிட்டோம். ஜல்லிக்கட்டுப் போட்டிபோலவே இதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன.

பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி

சுமார் 70 முதல் 100 கிலோ எடைகொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஆரம்பக்கோட்டிலிருந்து அவிழ்த்துவிடப்படும் பன்றிகள் மூன்றடி தொலைவில் போடப்பட்டிருக்கும் கோட்டைக் கடந்த பின்னர், அங்கிருக்கும் மூவர் பன்றியைப் பிடிக்க முயல்வார்கள்.

''அமைச்சர்  காளைக்கு நான்தான் டாக்டர்'' - மதுரை ’ஜல்லிக்கட்டுக் காளை’ ஸ்பெஷலிஸ்ட் மெரில் ராஜ்!

அதில், ஒருவர் மட்டுமே பன்றியைப் பிடிக்க வேண்டும். அதாவது பன்றி எல்லைக்கோட்டை நெருங்காத வண்ணம், அதன் பின்னங்காலை மட்டுமே பிடிக்க வேண்டும்.

பன்றி தழுவும் போட்டி
பன்றி தழுவும் போட்டி

சுமார் 80 கிலோவுக்கு மேலிருக்கும் பன்றியின் பின்னங்காலைப் பிடித்தால், நம்மையும் சேர்த்து இழுத்துச் செல்லும். அதையும் மீறி பன்றியைப் பிடித்து நிறுத்த வேண்டும். இது சவாலாக இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளிலிருந்து பன்றிகள் களமிறக்கப்பட்டன. வெற்றிபெற்ற பன்றிகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகள் கொடுத்தோம். சங்ககாலக் குறிஞ்சி நில மக்களின் நினைவாக, இந்தப் போட்டி நடந்தது. இதை நம் பாரம்பர்யத்தைப் போற்றும் நிகழ்வாக நாங்கள் கருதுகிறோம்” என்றார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு