Published:Updated:

கரூர்: `சந்துக்கடையில் சரக்கு விற்பனை' - அப்பாவியைத் தாக்கியதா போலீஸ்... என்ன நடந்தது?

பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பொன்ராஜ்
பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பொன்ராஜ் ( நா.ராஜமுருகன் )

``எங்கப்பா ஒரு வாயில்லாத பூச்சி. அதிர்ந்துகூடப் பேசத் தெரியாது. யாராச்சும் லேசா அதட்டுனாலே அழுதுடுவார். தண்ணி, பீடினு எந்தக் கெட்டப் பழக்கமும் அவருக்கு இல்லை. அப்படிப்பட்டவரை மது அருந்திட்டு ரோந்துக்கு வந்த ரெண்டு காவலர்கள் அடிச்சு துவைச்சுட்டாங்க...’’

தமிழ்நாட்டு போலீஸுக்கு இது கெட்ட நேரம்போல. வரிசையாகச் சர்ச்சையில் சிக்கிவருகிறார்கள். லேட்டஸ்ட்டாக கரூர் மாவட்டத்தில், ``சந்துக்கடையில் சரக்கு விக்கிறியா?’’ என்று அப்பாவி ஒருவரை அடித்ததாக இரண்டு காவலர்கள் சர்ச்சையில் சிக்கியிருப்பது கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பொன்ராஜ்
பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பொன்ராஜ்
நா.ராஜமுருகன்
கரூர்: `அமானுஷ்யக் கட்டடம்; அம்மோனியம் நைட்ரேட் பதுக்கல்?!' - அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கரூர் மாவட்டம், கடவூர் அருகேயிருக்கும் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் சொந்த வேலையாக நடந்தே அருகிலுள்ள இடையப்பட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது பாலவிடுதி காவல் நிலையத்தில் பணியாற்றிவரும், ரோந்து பணியில் இருந்த காவலர்கள் (ஏட்டு மணிகண்டன் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி) ``கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பவர்களின் சந்துக்கடை மற்றும் அவர்களின் விவரங்கள் தெரியுமா?’’ என்று பிச்சைமுத்துவிடம் விசாரித்ததாகச் சொல்லப்படுகிறது.

பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பொன்ராஜ்
பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பொன்ராஜ்
நா.ராஜமுருகன்

அதற்கு அவர், ``தெரியாது’’ என்று பதில் சொன்னதாகவும், அதன் பிறகு, ``நீ சரக்கு விக்கிறியா?’’ என்று கேட்டு, காவலர்கள் இருவரும் பிச்சைமுத்துவை அடித்து, அவரது சட்டையைக் கிழித்ததாகவும் பிச்சைமுத்து தரப்பில் சொல்கிறார்கள்.

மேற்கொண்டு நடந்தவை பற்றி, பிச்சைமுத்துவின் மகன் சதீஷிடம் கேட்டோம். ``எங்கப்பா ஒரு வாயில்லாத பூச்சி. அதிர்ந்துகூடப் பேசத் தெரியாது. யாராச்சும் லேசா அதட்டுனாலே அழுதுடுவார். தண்ணி, பீடினு எந்தக் கெட்டப்பழக்கமும் அவருக்கு இல்லை. அப்படிப்பட்டவரை, மது அருந்திட்டு ரோந்துக்கு வந்த ரெண்டு காவலர்க, அடிச்சு துவைச்சுட்டாங்க. அப்பா அழுதுக்கிட்டே வீட்டுக்கு வந்தார். எங்கப்பாவைக் காவலர்கள் அடிச்ச செய்தி தெரிஞ்சதும், ஊர் மக்கள் எல்லாரும் பாலவிடுதி காவல் நிலையத்துக்கு எதிராக ஒண்ணா திரண்டுட்டாங்க. விஷயம் பெருசாகறதைத் தெரிஞ்சுக்கிட்டதும், பாலவிடுதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் பொன்ராஜ், கொதிப்போட இருந்த மக்கள்கிட்ட வந்து சமாதானம் பேசினார்.

சதீஷ், பிச்சைமுத்து
சதீஷ், பிச்சைமுத்து
நா.ராஜமுருகன்

`ஒரு அப்பிராணியை இப்படி அடிச்சிருக்காங்களே அந்தப் பாவிங்க... அவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம். நீங்க இப்போ அமைதியா இருங்க'னு சொல்லி எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போனார். வேற விஷயமா வெளியூர் போயிருந்த ஆய்வாளர் மோகன்ராஜ், `இனி இப்படி நடக்காது'னு நைச்சியமாப் பேசி, விஷயத்தை அமுக்கிட்டார். எங்கப்பாவை அடிச்சவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

இது குறித்து, பாலவிடுதி காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜிடம் பேசினோம். ``இடையப்பட்டி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள புதரில் மறைவாகவெச்சு சிலர் சட்டவிரோதமாக மது விற்பதாகத் தகவல் வந்ததின் பேரில், மணிகண்டனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கே போயிருக்காங்க. அப்போ, பிச்சைமுத்து அங்கே இருந்திருக்கிறார். அவரிடம் கேட்டதற்கு முழித்திருக்கிறார். அதனால் அவர்மீது சந்தேகப்பட்டிருக்காங்க. ஆனா, போகப் போக அவர் ஓர் அப்பிராணிங்கிறதை உணர்ந்திருக்காங்க.

அதனால அவரையும் சேர்த்துக்கிட்டு, முள் புதருக்குள்ள மதுபாட்டில் எதுவும் பதுக்கப்பட்டிருக்கான்னு தேடியிருக்காங்க. அப்போ மணிகண்டன் கையில முள் கிழிச்சு, ரத்தம் வழிஞ்சிருக்கு. அதுலருந்து ரெண்டு சொட்டு ரத்தம், பிச்சைமுத்து முதுகுச் சட்டையில பட்டிருக்கு.

பாலவிடுதி காவல் நிலையம்
பாலவிடுதி காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

வீட்டுக்குப் போனதும் அவரோட வீட்டுல இருக்கறவங்க, அது போலீஸ் அடிச்சதால ஏற்பட்ட ரத்தக்கறைனு தவறாக நினைச்சுட்டாங்க. அதோடு, அவர் முதுகுல காயம் பட்டிருக்கான்னு சட்டையைக் கிழிச்சுப் பார்த்திருக்காங்க. அவ்வளவுதான் நடந்தது. ஆனா, அதுக்குள்ள எங்க காவல் நிலைய தலைமைக் காவலர் பொன்ராஜ் அங்கே போய் மக்களைச் சமாளிப்பதற்காக, நடக்காத ஒரு சம்பவத்தைச் சொல்லும் மக்களுக்கு சார்பாகப் பேசி, விவகாரத்தைப் பெருசாக்கிட்டார். உண்மை நிலவரத்தைத் தெரிஞ்சுக்கிட்டதும், மக்கள் அமைதியாயிட்டாங்க" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு