Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடிகாட்டும் சி.பி.ஐ! - அ.தி.மு.க-வுக்கு நெருக்கடியா?

 அருளானந்தம்
News
அருளானந்தம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கால் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி ஏற்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மூன்று பேரை நேற்று சி.பி.ஐ கைதுசெய்தது. ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அருளானந்தம், பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, ஹேரேன்பால் மற்றும் பைக் பாபு அ.தி.மு.க உறுப்பினர்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்கள் மூன்று பேரும், இன்று காலை கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு வரும் 20-ம் தேதி வரை (15 நாள்கள்) நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், அருளானந்தம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் சேர்மன் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டம், பவானியில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பயிற்சியில் ஆச்சிப்பட்டி ஊராட்சித் தலைவர் ரெங்கநாதன் (அ.தி.மு.க) கலந்துகொண்டார்.

அப்போது, ஹெரேன்பால் மற்றும் பைக் பாபு அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தகவல்கள் வெளியானவுடன் அருளானந்தத்தை அ.தி.மு.க-விலிருந்து நீக்கி ஓ.பி.எஸ்,, இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர். ``பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளிகூட தப்பித்துவிடக் கூடாது” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தி.மு.க புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், ``இந்த வழக்கில் அ.தி.மு.க முக்கியப்புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்பதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறிவருகிறோம். இரண்டாண்டுகள் பெரிதாக நடவடிக்கை இல்லை. இது காலம் கடந்த கைதுதான். கைதுசெய்யப்பட்ட அருளானந்தம், வடுகபாளையத்தில் மட்டும் மூன்று டாஸ்மாக் பார்களை நடத்திவருகிறார். பைக் பாபு, ஹெரேன்பால் இருவரும் அ.தி.மு.க-வின் உறுப்பினர்கள்.

நவநீதகிருஷ்ணன்
நவநீதகிருஷ்ணன்

இவர்கள் மூவருமே அ.தி.மு.க-வின் நிழல்களில் வளர்ந்து, இத்தனை நாள்களாகத் தப்பித்துக்கொண்டிருந்தனர். இவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரும் ஏதாவது ஒரு வகையில் அ.தி.மு.க-வில் பலனடைந்து, அவர்களுடன் நெருக்கமான உறவில் இருந்தவர்கள்தான். எனவே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றார்.

போஸ்டரில்...
போஸ்டரில்...

இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் பேசியபோது, ``கைதுசெய்யப்பட்டவர்களுக்கும், அமைச்சர் உள்ளிட்ட மற்ற கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சிரீதியான தொடர்புதான் இருந்தது. அமைச்சர்களுடன் கட்சிகாரர்கள் புகைப்படம் எடுப்பது சாதாரண விஷயம்தான். எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் பிரச்னையை பூதாகரமாக்குகிறார்கள். அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டதுமே அவர்களை தலைமை கட்சியிலிருந்து நீக்கிவிட்டது” என்றனர்.