Published:Updated:

நகைக்கடன்: விவரங்களைச் சேகரிக்கும் தமிழக அரசு; விரைவில் வருமா கடன் தள்ளுபடி அறிவிப்பு?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 சவரன் நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விவரங்களைக் கூட்டுறவு வங்கிகளிடம் அரசு கேட்டுள்ளது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தி.மு.க-வும் சரி, அ.தி.மு.க-வும் சரி கடந்த தேர்தலின்போது பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே அள்ளித் தெளித்தன. இதில் குறிப்பாக, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்கிற நோக்கில் தயாரிக்கப்பட்டு, பரப்புரை செய்யப்பட்டது.

அதில் பெட்ரோல் விலை குறைப்பு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடன்கள் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 என்கிற முக்கிய வாக்குறுதிகள் மக்களின் வரவேற்பைப் பெற்றன. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம் என்று சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்
பெட்ரோல் விலைக் குறைப்பு முதல் புதிய டைடல் பூங்காக்கள் வரை; தமிழக பட்ஜெட்டின் டாப் 10 ஹைலைட்ஸ்!

இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3-வது நாள் அமர்வில் அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், ``தமிழக அரசின் நிதிநிலையைக் காரணம் காட்டி, தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டுவிட வேண்டாம்” என்று பேசினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, ``தேர்தல் வாக்குறுதியிலிருந்து நாங்கள் பின்வாங்கியதாகப் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதி லிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

மேலும் அவர் இது குறித்து பேசும்போது, ```விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்வோம்; நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே, அதற்கெல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லியிருக்கின்றீர்களே' என்ற அடிப்படையிலே உறுப்பினர் உதயகுமார் அவர்கள் இங்கே பேசியிருக்கலாம். உறுதியாகச் சொல்கிறேன்.

வெள்ளை அறிக்கையிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையிலும், நிதியமைச்சர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது நகைக்கடன் வழங்கியிருப்பதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. விவசாயிகளுடைய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அதிலும் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக் கின்றன. அதையெல்லாம் முறையாக சரிசெய்து, அதற்குப் பிறகு நிச்சயமாகக் கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன்
நகைக்கடன்
அதிமுக இமேஜை காலி செய்கிறதா தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை?!

இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 சவரன் நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விவரங்களைக் கூட்டுறவு வங்கிகளிடம் அரசு கேட்டுள்ளது. பயனாளிகள் கே.ஒய்.சி ஆவணங்கள், குடும்ப அட்டை விவரங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விரைவில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை தங்க நகைகளை வைத்து கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு