Published:Updated:

`விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ சிறந்த இடத்தை பிடித்துள்ளது'- நாசா வீரர் பாராட்டு!

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 தரை இறங்குவதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ சிறந்த இடத்தை பிடித்துள்ளது என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் தெரிவித்தார்.

don thomas
don thomas

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரனில் காலடி வைத்ததன் 50-வது ஆண்டை நினைவுகூறும் வகையில் பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று தன்னுடைய விண்வெளி அனுபவங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

don thomas
don thomas

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், விண்வெளி ஆராய்ச்சி குறித்த பள்ளி மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விண்வெளி பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கி கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது அனுப்பியுள்ள சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி செய்வதன் மூலம் இஸ்ரோவுக்கு மட்டுமின்றி நாசா மற்றும் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்மை தரும். இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

don thomas
don thomas

நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 தரையிறங்குவதன் மூலம் இந்திய மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான நல்ல எதிர்காலம் உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு இஸ்ரோ சிறந்த அளவில் ஊக்கமும், பயிற்சியும் அளித்து வருகிறது. இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ ஒரு சிறந்த இடத்தை பிடித்துள்ளது. எதிர்காலத்தில் சந்திரன் மட்டுமின்றி செவ்வாயை பற்றி ஆராய்ச்சி செய்யவும் இந்திய மாணவர்களுக்கு அதிகளவு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.