Published:Updated:

இப்படியொரு கடுமையை இதுவரை காட்டியதில்லை! - பா.ஜ.க-வை சாடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடத்தப்பட்ட விதத்துக்கு ஆளும்கட்சியினரே காரணமென்று அவரின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யை பாரதிய ஜனதா கட்சி குறி வைத்துள்ளதாக அவரின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும், விஜய்யை அவமானப்படுத்துவதற்காகவே, அவருடைய காரில் வரவிடாமல், வருமானவரித்துறையினர் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் அதிக சம்பளம் வாங்கி அதற்கான வரியை முறையாகச் செலுத்தவில்லையென்ற புகாரின் அடிப்படையில் அவரிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தச் சென்றனர். 'படப்பிடிப்பு முடிந்ததும் நானே நேரில் வருகிறேன் 'என்று அதிகாரிகளிடத்தில் விஜய் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் காரில் ஏறி வர வேண்டுமென்று கெடுபிடி காட்டியுள்ளனர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய்யை அவரின் காரில் வர அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இவையெல்லாம் நடிகர் விஜய்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. படப்பிடிப்புக் குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதிகாரிகளின் காரில் ஏறி நடிகர் விஜய் சென்னை வந்தார். இதற்கு முன்பு, எந்தப் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இத்தனை கடுமை காட்டியதில்லை.

`இரண்டே கேள்விகள்; 52-48, 53-47!' - பதவி நீக்கத் தீர்மானத்தில் வென்ற அதிபர் ட்ரம்ப்

ஆனால், நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டதற்கு பாரதிய ஜனதா கட்சியினரே காரணமென்று அவரின் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு அவரை அதிகாரிகள் அழைத்து வந்தனர். வீடு அருகே மீடியாக்காரர்கள் குவிந்திருந்தனர். மீடியாக்காரர்களைப் பார்த்த விஜய், காரின் உள்ளே அதிகாரிகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ள தன்னை யாரும் புகைப்படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக முகத்தை மூடிக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை வேதனை அடைய வைத்தது.

இதற்கிடையே, நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருக்கும்போதே `We Stand With Vijay' என்ற ஹேஸ்டேக்கை அவரின் ரசிகர்கள் உருவாக்கி டிரெண்டிங் செய்ய முயன்றனர். 'மக்கள் பிரச்னைகளை சமூக அக்கறையுடன் தன் படங்களில் பிரதிபலிப்பவர் எங்கள் விஜய். அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிகள் ஏற்படுத்தும் இடையூறுகள் அவரை ஒன்றும் செய்யப்போவதில்லை' என்று விஜய் ஃபேன் கிளப் ட்வீட் வெளியிட்டுள்ளது.

`இரண்டே கேள்விகள்; 52-48, 53-47!' - பதவி நீக்கத் தீர்மானத்தில் வென்ற அதிபர் ட்ரம்ப்

'எங்கள் தளபதி சினிமா உலகுக்குள் நுழைந்தபோது, பல அவமானங்களைச் சந்தித்தார். அதற்காக அவர் துவண்டுவிடவில்லை. பின்வாங்கிவிடவில்லை. தொடர்ந்து போராடி வெற்றி பெற்றார். இன்று வளர்ந்து சினிமாத்துறையில் வெற்றி பெற்ற மனிதராக வலம் வருகிறார். வளர்ந்த பிறகு, தன்னை அவமானப்படுத்தியவர்களைப் பழி வாங்கவில்லை. இதனால்தான் அவரை நாங்கள் தங்கத் தளபதி என்று அழைக்கிறோம்' என்று actor vijay fan club ட்வீட் வெளியிட்டிருக்கிறது.

பின் செல்ல