Published:Updated:

``ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவது ஏன்?" - அமைச்சர் கே.என். நேரு விளக்கம்

கே.என்.நேரு

"தேர்ந்தெடுத்த மக்களுக்காகத் திட்டங்கள் தீட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதியை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" - அமைச்சர் கே.என்.நேரு

``ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவது ஏன்?" - அமைச்சர் கே.என். நேரு விளக்கம்

"தேர்ந்தெடுத்த மக்களுக்காகத் திட்டங்கள் தீட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதியை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" - அமைச்சர் கே.என்.நேரு

Published:Updated:
கே.என்.நேரு

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தவுடன், சில விலை உயர்வுகளைச் செய்திருக்கிறது தி.மு.க அரசு. அதாவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியப் பகுதிகளில் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.சொத்துவரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய வகையில் மார்ச் 5-ம் தேதி போராட்டம் நடந்தது.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி என தி.மு.க-வுடன் கூட்டணியிலிருக்கும் கட்சிகளும் தி.மு.க அரசுக்குத் தங்களது கண்டனங்களை அறிக்கைகள் மூலம் தெரிவித்தன.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி.நகரில், நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகத்தில் 126 பேருக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை மற்றும் கொரோனா காலத்தில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசு தாரர்கள் 71 பேருக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம், "சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் இருக்கிறார்கள். மேலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்கவும், முறையற்ற நிர்வாகத்தை முறைப்படுத்தவும் சொத்து வரி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பத்து பதினைந்து வருடங்களுக்கு ஒருமுறை சொத்து வரியை உயர்த்துவது சரியாக இருக்காது.

சொத்துவரி
சொத்துவரி

அதனால்தான், ஆண்டுதோறும் வரி விதித்துக் கொள்ளும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுத்த மக்களுக்காகத் திட்டங்கள் தீட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதியை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதற்கும், யாரையும் சங்கடப் படுத்துவதற்கும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்துவரி குறைவாக உள்ளது.

கே.என். நேரு
கே.என். நேரு

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதால், அதைச் சிறப்பாக நடத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவக பணியாளர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை. மேலும் அம்மா உணவகங்களில் குறைபாடு இருப்பதாகச் சுட்டிக் காட்டினால் அது நிவர்த்தி செய்யப்படும். எந்த ஒரு அரசு நிலத்தையும் தனியாருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனப் பேசினார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism