Published:Updated:

அரியலூர்: 22 பேருக்கு ஜாமீன்... விடுவிக்கப்பட்டதோ 24 பேர்... குழம்பிய போலீஸ்... நடந்தது என்ன?

அரியலூர்
அரியலூர்

இந்தச் சம்பவத்தை உயரதிகாரிகளிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறார்கள். உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டால், நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

சிறையிலிருந்து 22 பேரை அனுப்பச் சொல்லி நீதிமன்றம் வழங்கிய ஜாமீனில், அதிகாரிகள் கூடுதலாக இரண்டு பேரை வெளியில்விட்ட சம்பவம் அரியலூரில் அரங்கேறியுள்ளது. வெளியில் சென்ற அந்த இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொண்டு வந்தது காவல்துறை.

அரியலூர்
அரியலூர்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து மதுபானங்களைப் பதுக்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற சட்டத்துக்குப் புறம்பான பல வேலைகள் தமிழகத்தில் அரங்கேறிவருகின்றன. இந்தநிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்தில், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 22 பேருக்கு அரியலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கைதிகளை வெளியில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகத்தினர் செய்தனர். அப்போது ஆங்கிலம் தெரியாத காரணத்தால் கீழப்பழுவூர் அருகேயுள்ள மலத்தான் குலத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி ராபர், பாலகுமார் ஆகியோர் தவிர்த்து என்பதை இருவரையும் சேர்த்து எனத் தவறாகப் புரிந்துகொண்டு

அரியலூர் கலெக்டர் ஆபீஸ்.
அரியலூர் கலெக்டர் ஆபீஸ்.

24 பேரை ஜாமீனில் விடுவித்தனர். அன்று மாலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது நடந்த தவறு தெரியவந்தது. சாராய வழக்கில் கைதான பாலகுமார், வேளாங்கண்ணி ராபர்ட் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க போலீஸார் முயன்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், இருவர் தவறுதலாக ஜாமீனில் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

என்ன நடந்தது என்று காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``சாராய வழக்கில் 27 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களில் 22 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேரைத் தவிர்த்து என்று ஜாமீனில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைச் சரியாகப் படிக்கவில்லையா அல்லது கவனிக்காமல் இருவரையும் வெளியில்விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.

அரியலூர்
அரியலூர்

இந்தநிலையில், இந்தச் சம்பவத்தை உயரதிகாரிகளிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறார்கள். பின்பு உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டால் நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். பின்பு பெரம்பலூரைச் சேர்ந்த ஒரு பெரிய அதிகாரியிடம் கேட்டதற்கு, அது பெரிய தவறாகிவிடும். நடந்த சம்பவத்தைச் சொல்லிவிடுங்கள். அப்போதுதான் தப்பிக்க முடியும் என்று ஒரு சில ஐடியாக்களைச் சொல்லியிருக்கிறார். அதன் பெயரில் ஜெயங்கொண்டம் கிளைச் சிறை போலீஸார் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு