Election bannerElection banner
Published:Updated:

கோவை: பராமரிப்பதில் சிக்கல்... ஶ்ரீவில்லிப்புத்தூருக்கே திருப்பியனுப்பப்பட்ட ஜெயமால்யதா யானை!

ஜெயமால்யதா யானை
ஜெயமால்யதா யானை

கோவை தேக்கம்பட்டி யானைகள் முகாமில், பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யதா யானை, ஶ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுக்கே அனுப்பப்பட்டது.

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த மாதம் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது. 26 யானைகள் கலந்துகொண்ட இந்த முகாமில், யானைகளுக்கு சிறப்பு உணவு, ஷவர் குளியல், நடைப்பயிற்சி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஜெயமால்யதா யானை
ஜெயமால்யதா யானை
மூர்க்கத்தனமாகத் தாக்கும் பாகன்கள்; கதறும் யானை! - கோவை யானைகள் முகாம் அதிர்ச்சி

இதற்கிடையே, ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான ஜெயமால்யதா என்ற யானையை அதன் பாகன் வினில்குமாரும், உதவியாளர் சிவபிரசாத்தும் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வினில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வினில்குமாரும் சிவபிரசாத்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், ஜெயமால்யதா யானையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது ஒரு பக்கமிருக்க, அந்த யானையின் உரிமையாளருக்கான சான்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்தது. அது காலாவதியாகிவிட்டதால், ஜெயமால்யதா யானையைத் திருப்பியனுப்புமாறு அஸ்ஸாம் வனத்துறை கூறியது.

ஜெயமால்யதா யானை
ஜெயமால்யதா யானை

மேலும், ஜெயமால்யதா யானையைத் தாக்கியவர்கள் மீது காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் மற்றும் வளர்ப்பு யானைகள் மேலாண்மை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை வன உயிரின காப்பாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது.

இந்தநிலையில், சில நாள்களுக்கு முன்பு வினில்குமார், சிவபிரசாத் இருவருக்கும் மேட்டுப்பாளையம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகன்கள் ஜாமீனில் வெளிவந்தாலும், சஸ்பெண்டில் இருப்பதால், யானையைப் பராமரிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது.

ஜெயமால்யதா யானை
ஜெயமால்யதா யானை

இதைத் தொடர்ந்து, ஜெயமால்யதா யானையை, மீண்டும் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கே அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, இன்று அதிகாலை தேக்கப்பட்டியிலிருந்து யானை ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு