Published:Updated:

`பிளான் `பி'யும் இங்கே இல்லை; மாற்று ஐடியாவும் இல்லை!'- சுர்ஜித்தை நினைத்து வேதனைப்படும் ஜோதிமணி

சுர்ஜித்தின் தாய்
News
சுர்ஜித்தின் தாய்

அமைச்சர்கள், அதிகாரிகள் இரவுப்பகலாக இங்கேதான் இருக்கிறார்கள், அது மறுப்பதற்கில்லை. ஆனால், பிளான் பி இங்கே இல்லை. ஒரு ஐடியா தோல்வியடைந்தால், மாற்று ஐடியா இல்லை.

Published:Updated:

`பிளான் `பி'யும் இங்கே இல்லை; மாற்று ஐடியாவும் இல்லை!'- சுர்ஜித்தை நினைத்து வேதனைப்படும் ஜோதிமணி

அமைச்சர்கள், அதிகாரிகள் இரவுப்பகலாக இங்கேதான் இருக்கிறார்கள், அது மறுப்பதற்கில்லை. ஆனால், பிளான் பி இங்கே இல்லை. ஒரு ஐடியா தோல்வியடைந்தால், மாற்று ஐடியா இல்லை.

சுர்ஜித்தின் தாய்
News
சுர்ஜித்தின் தாய்

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. `பாறைகள் கடினமாக உள்ளது. இப்படியொரு பாறைகளை நான் பார்த்ததில்லை” என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், ``எந்தக் காரணத்துக்காகவும் தோண்டும் பணி நிறுத்தப்படாது” என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தீபாவளியை விட்டுவிட்டு, குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் சம்பவம் நடைபெறும் இடத்துக்கு வரும் சூழலில் மற்றும் அனைத்து தாய்மார்களும் கண்ணீருடன் இருக்கின்றனர்.

ஜோதிமணி
ஜோதிமணி

சுர்ஜித்தின் தாயார் முதல்நாள் வரும்போது, கையெடுத்து கும்பிட்டு சுர்ஜித்தை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கேட்டார். ஒவ்வொரு நிமிடமும் தாமதமாகும்போது, வீட்டுக்குள் சென்று அவர்களைப் பார்ப்பதற்கு எனக்கு அச்சமாக இருக்கிறது. மீட்பு நடவடிக்கையைப் பொறுத்தவரை, பெரிய முன்னேற்றமில்லாத சூழல் இருக்கிறது. இங்கு எல்லாரும் நல்ல நோக்கத்தோடுதான் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாருடைய நோக்கத்திலும் எந்தக் குறையும் கிடையாது. ஆனால், தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட தாமதங்கள்தான், குழந்தையின் உயிருக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது. தேசியப் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தாமதமாக வந்ததிலிருந்து தொடர்ச்சியாக பல தாமதங்கள் ஏற்பட்டுவருகின்றன. பாறையைக் குடையும் முடிவுகள் சாத்தியமில்லை என்று நான் அமைச்சரிடம் நேற்று முதல் கூறிவருகிறேன்.

அந்தத் தாய், சுர்ஜித்தின் ஆடையைக் கட்டியணைத்தபடி அமர்த்திருக்கிறார். சாப்பிடுங்க என்ற சொல்வதற்கே எனக்கு பயமாக இருக்கிறது.
ஜோதிமணி

ஒரு மெஷின் 16 மணிநேரத்தில் 24 அடிதான் குடைகிறது என்றால், அதைவிட 3 மடங்கு திறன் வாய்ந்த மிஷின் 75 அடி குடைய மீண்டும் 16 மணிநேரம் தேவை. மேலும் 10 அடி தேவைப்படும் அதற்கு 2 மணிநேரம். ஆக 18 மணி நேரம் ஆகும் நீளவாக்கில் வெட்டுவதற்கு. பின்பு, அகலத்தில் வெட்ட வேண்டும். அதை தீயணைப்புத்துறை எந்த இயந்திரத்தின் பயன்பாடு இல்லாமல், கைகளில்தான் பண்ண வேண்டியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் இரவுப்பகலாக இங்கேதான் இருக்கிறார்கள், அது மறுப்பதற்கில்லை. ஆனால், பிளான் பி இங்கே இல்லை. ஒரு ஐடியா தோல்வியடைந்தால், மாற்று ஐடியா இல்லை. மிஷின் மூலம் குடைவது மக்களிடையே தவறான நம்பிக்கை கொடுக்கும் என அச்சப்படுகிறேன்” என்றார்.

ஜோதிமணி
ஜோதிமணி

தொடர்ந்து, ``இந்தக் கட்டத்தில்கூட நாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெளிவில்லாமல் இருந்து பயனில்லை. குழந்தை விழுந்து 3 நாள்கள் ஆகிவிட்டன. இன்றும் பாறையைக் குடைவோம் என்ற முடிவு தவறான முடிவு. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகள் முடிவெடுக்கும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம். ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டிய தேவை இருக்கு. அதற்கு ரிஸ்க் எடுக்க முடியாது என்கின்றனர். குழந்தையை நாம் வெளியில் எடுத்து கொடுக்க வேண்டியுள்ளது. நிச்சயம் பாறையைக் குடைந்து உள்ளே போவது கடினம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முடிவெடுக்க முடியாத சூழல் இருக்கிறது. முதல்வர் தலையிட வேண்டும். முடிவெடுத்து, குழந்தையை மீட்டு குடும்பத்தினரிடம் கொடுங்கள்.
ஜோதிமணி

தமிழகமே இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நல்ல நோக்கம், கடுமையான உழைப்பு இருக்கு. ஆனால், அதில் பயனில்லை என்கின்ற வலி என் மனதில் இருக்கு. அந்தத் தாய், சுர்ஜித்தின் ஆடையைக் கட்டியணைத்தபடி அமர்த்திருக்கிறார். சாப்பிடுங்க என்று சொல்வதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு அவர்களின் வலி புரிகிறது. முடிவெடுக்க முடியாத சூழல் இருக்கிறது. முதல்வர் தலையிட வேண்டும். முடிவெடுத்து, குழந்தையை மீட்டு குடும்பத்தினரிடம் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.