Published:Updated:

திண்டுக்கல்: 6 மணி நேரம் தரையில் கிடத்தப்பட்டிருந்த பத்திரிகையாளர் உடல்! - அரசு மருத்துவமனை அவலம்!

தரையில் கிடத்தப்பட்டுள்ள பத்திரிகையாளர் உடல்
தரையில் கிடத்தப்பட்டுள்ள பத்திரிகையாளர் உடல்

போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சிகிச்சை பலனின்றி இறந்த பத்திரிகையாளர் உடலை, ஆறு மணி நேரமாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனை வார்டின் தரையில் கிடத்திவைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துவருவது ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துவருகிறது. இதற்கு திண்டுக்கல் மாவட்டமும் விதிவிலக்கல்ல. மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 400-ஐ நெருங்குகிறது. சராசரியாக 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றனர். 2,500-க்கும் மேற்பட்டோர் சிசிச்சையில் உள்ளனர்.

திண்டுக்கல்: `உங்க தோட்டத்தில தங்கப்புதையல் இருக்கு’ - ரூ.22 லட்சம், 45 பவுன் நகை சுருட்டிய ஜோதிடர்
திண்டுக்கல் அரசு மருத்துவமனை
திண்டுக்கல் அரசு மருத்துவமனை

திண்டுக்கல் அரசு பொதுமருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் பொதுமக்கள் அதிகரித்துள்ளனர். கொரோனா பரிசோதனையில் ஆரம்பித்து, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இடம் கிடைக்காமல் காத்திருப்பவர்கள் வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது மருத்துவமனை. இந்தநிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பத்திரிகையாளர் அழகர்சாமியின் உடல் சுமார் ஆறு மணி நேரம், சிகிச்சை வார்டின் தரையில் கிடத்திவைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`கலெக்டர் ஆபீஸ் வரை செலவு இருக்கு’ - ரேஷன் அட்டை வழங்க வெளிப்படையாக லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்ட்

சிகிச்சை பலனின்றி பத்திரிகையாளர் இறந்தநிலையில், அவரது உடல் அவர் சிகிச்சை எடுத்துவந்த கட்டிலின் அருகே தரையில் கிடத்தப்பட்டு, வேறொரு நபர் அந்தக் கட்டிலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இறந்த நபரின் உடலை சிகிச்சை வார்டிலிருந்து பிரேத பரிசோதனை செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்ல ஆறு மணி நேரம் ஆகியிருக்கிறது. ’மருத்துவமனையிலுள்ள பணியாளர்கள் பற்றாக்குறைதான் இதற்குக் காரணம். கூடுதல் பணியாளர்களை நியமிப்பது அல்லது தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்தால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்’ என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள். இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணியாளர்களைக் கூடுதலாக நியமிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு