Published:Updated:

`உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி!'- துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்

தற்கொலைக்கு முயன்ற விவசாயி
தற்கொலைக்கு முயன்ற விவசாயி

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயியைக் காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்.

மக்கள் குறைதீர்க்கும் நாளான நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் மனு அளிக்க வந்துகொண்டிருந்தனர். அப்போது மனுக்கொடுக்க வந்த திருமங்கலம் அருகே உள்ள கரிசக்காலப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் உள்ள டீசலை தன் தலையிலும் உடலிலும் ஊற்றிக்கொண்டார். இதை அங்கிருந்த பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி செய்தியாளர்களும், காவல்துறையினரும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தற்கொலைக்கு முயன்ற விவசாயி
தற்கொலைக்கு முயன்ற விவசாயி

சற்றும் யோசிக்காமல் உடனே அவரருகே சென்று, அவரை தீ வைத்துவிடாமல் தடுத்தனர். காவல்துறையினர் அவர் உடலில் தண்ணீர் ஊற்றினர். பின்பு முதலுதவி அளிக்கப்பட்டது. ``இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடமும் மனுக்கொடுத்து வந்தும் கிடைக்கவில்லை. பட்டாவுக்கு அதிகமான லஞ்சம் கேட்டார்கள். அதைக் கொடுக்க முடியவில்லை. கலெக்டரிடம் மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் இப்படி நடந்துகொண்டேன்" என்று கூறினார்.

நடந்த சம்பவத்தை ஒரு செய்தி என்ற கோணத்தில் பார்க்காமல், விபரீதம் நடந்துவிடக் கூடாது என்ற மனிதாபிமானத்துடன், விவசாயியின் தற்கொலையைத் தடுக்க களம் இறங்கிய பத்திரிகையாளர்களை அனைவரும் பாராட்டினார்கள். அவரைக் காப்பாற்ற முயன்றபோது டீசல் பட்டு பத்திரிகையாளர்கள் சிலரின் உடலில் எரிச்சலும் ஏற்பட்டது. பிறகு, அவரைக் காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

தற்கொலைக்கு முயன்ற விவசாயி
தற்கொலைக்கு முயன்ற விவசாயி

இவரைத் தொடர்ந்து அனுப்பானடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரும் தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு