Published:Updated:

'சைபர் குற்றங்கள்... தற்காத்துக்கொள்வது எப்படி?'- ஜூனியர் விகடன் நடத்தும் ஆன்லைன் நிகழ்ச்சி!

கட்டணமில்லா வெபினார்
கட்டணமில்லா வெபினார்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் சைபர் குற்றங்கள் எனப்படும் இணையவழிக் குற்றங்களும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜூனியர் விகடன் நடத்துகிறது.

``ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், நிதி மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கும் அளவுக்கு இணையவழி நிதி மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இணையவழிக் குற்றங்கள் 400 மடங்கு அதிகரித்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பாக அஜித் தோவல் அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

சண்முகவேல் சங்கரன்
சண்முகவேல் சங்கரன்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் இணையவழிக் குற்றங்கள், மோசடிகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆன்லைன் மூலமாக விதவிதமான மோசடிகள் நடைபெறுகின்றன. பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்களில் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் இணையங்களில் வெளியிடப்படுகின்றன. 50,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக காவல்துறையில் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

https://bit.ly/3fkm9XX

நம்முடைய ஏ.டி.எம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு PIN நம்பர்களைக் களவாடி, நம் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. மிகக் குறைந்த வட்டிக்குக் கடன் தருவதாக செல்போனுக்கு அழைப்புகள் வருகின்றன. நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசி, முன்பணம் என்ற பெயரில் ஒரு தொகையைக் கறந்துவிடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுவார்கள்.

கட்டணமில்லா வெபினார்
கட்டணமில்லா வெபினார்

இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவருகிறார்கள். ஆகவேதான், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை ஜூனியர் விகடன் நடத்துகிறது.

https://bit.ly/3fkm9XX

மைக்ரோசாஃப்ட், ஐ.பி.எம் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் பாதுகாப்பு அதிகாரியாக 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்கொண்ட Cyber Expert திரு. சண்முகவேல் சங்கரன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இணையவழி மோசடிகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி என்கிற ஆலோசனைகளை அவர் வழங்குகிறார். உங்கள் சந்தேகங்களுக்கும் திரு.சண்முகவேல் சங்கரன் பதில் அளிப்பார். இந்தக் கட்டணமில்லா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று, பயன்பெறலாம்.

https://bit.ly/3fkm9XX

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள்

28.05.2021 அன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்...

https://bit.ly/3fkm9XX

அடுத்த கட்டுரைக்கு