Published:Updated:

``ரஜினி பேசியதற்கு அவரேதான் விளக்கம் தர வேண்டும்!” - அமைச்சர் கடம்பூர் ராஜு

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

குடியுரிமை சட்டத்தைப் பொறுத்தவரை முதலமைச்சரும் வருவாய்த்துறை அமைச்சரும் சட்டமன்றத்திலேயே தெளிவான விளக்கம் கொடுத்து விட்டனர்.

`சமூகமும் அரசியலும் கெட்டுவிட்டதாகக் கூறும் ரஜினி ஏன் அரசியலுக்கு வர நினைக்கிறார்?' என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

விருதுநகரில் நேற்று நடந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம், ''வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கலச்சிலை அமைக்கப்படும்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தமிழில் குடமுழுக்கு நடத்தியிருந்தால் அதை முன்னுதாரணமாக வைத்து இப்போது நடத்தலாம். ஆனால், அப்போது செய்யாமல் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்போல் தற்போது ஸ்டாலின் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கேட்கிறார். அது முடியாது, சம்பிரதாயப்படிதான் நடைபெறும்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

சமூகமும் அரசியலும் கெட்டுவிட்டதாகக் கூறும் ரஜினி ஏன் அரசியலுக்கு வர நினைக்கிறார்? துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றி ரஜினி பேசியதற்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். நான் கூற முடியாது. கமலுக்கும் வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை. அரைகுறையாகப் பேசுகிறார்.

குடியுரிமை சட்டத்தைப் பொறுத்தவரை முதலமைச்சரும் வருவாய்த்துறை அமைச்சரும் சட்டமன்றத்திலேயே தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டனர். சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தமிழக அரசு பாதுகாக்கும்.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

காங்கிரஸைப் பற்றி தி.மு.க-வினர் இவ்வளவு கூறிய பிறகும், தன்மானம் இருந்தால் காங்கிரஸ் அங்கு நுழையக்கூடாது. நகராட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, தமிழக அரசு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு