Published:Updated:

மீண்டும் அத்துமீறும் வனத்துறை..? - பட்டா கிடைத்தும், அல்லல்படும் காடர் பழங்குடி மக்கள்!

காடர் மக்கள் குடிசை
News
காடர் மக்கள் குடிசை

``அந்த மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்து, நேரம் கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, பழங்குடி மக்களிடம் அத்துமீறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் மூத்த பழங்குடிகளான காடர் மக்களின் கல்லாறு கிராமம், கடந்த 2019-ம் ஆண்டு மழைவெள்ளத்தில் சிதைந்துவிட்டது. உயிரைக் கையில் பிடித்துகொண்டு, வனத்தில் வேறு பகுதிக்குக் குடியேறிய காடர்களை, வனச்சட்டத்தை காரணம் காட்டி வெளியேற்றியது வனத்துறை.

காடர் பழங்குடி
காடர் பழங்குடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக லைன் வீடுகளில் காடர்கள் தங்கவைக்கப்பட்டனர். அந்த மக்களின் தொடர் போராட்டத்துக்கு ஆரம்பத்தில், அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையடுத்து, காடர் மக்களாகவே, தங்கள் பூர்விக நிலமான தெப்பக்குளமேடு பகுதிக்குக் குடியேறினர். தொடர் போராட்டம் காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு அந்த மக்களுக்கு பட்டா வழங்கியது.

காடர் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் அமைச்சர்
காடர் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் அமைச்சர்

அந்த இடத்தில் காடர் மக்கள் குடிசை போட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் குடிசைகளை அப்புறப்படுத்தினர். இதனால், காடர் பழங்குடி மக்கள் மிகுந்த வேதனை அடைந்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``21 குடும்பங்களுக்கு தலா 1.5 சென்ட் இடம் கொடுத்தார்கள். அங்குதான் குடிசை அமைத்துவந்தோம். இன்னும் இரண்டு நாள்களில் குடிசைக்குள் குடியேறத் திட்டமிட்டிருந்தோம். இன்று காலை 9 மணி அளவில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறை அராஜகமாக, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் பார்க்காமல் எங்கள் குடிசையைப் பிரித்துப் போட்டுவிட்டனர்.

காடர் பழங்குடி குடிசைகளை அகற்றும் வனத்துறை
காடர் பழங்குடி குடிசைகளை அகற்றும் வனத்துறை

எங்களுக்கு நடக்கும் அநியாயம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது" என்று வேதனை தெரிவிக்கின்றனர் காடர் மக்கள்.

``அரசு பட்டா கொடுப்பதற்கு முன்பு அந்த மக்கள் தெப்பக்குளமேடு பகுதிக்குச் சென்றுவிட்டனர். பட்டா கொடுப்பதற்கு முன்பே குடிசை போடத் தொடங்கிவிட்டனர். குடிசை போடும் இடத்துக்குத்தான் பட்டா கொடுத்திருக்கிறார்கள் என்று அந்த மக்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் நான்கு குடிசைகள் அமைத்திருப்பது பட்டா பூமி இல்லை என்கின்றனர்.

காடர் பழங்குடி - வனத்துறை
காடர் பழங்குடி - வனத்துறை

அவர்களுக்குப் பட்டா கொடுத்திருப்பது அருகிலுள்ள இடமாம். எதுவாகினும் அந்த மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்து, நேரம் கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, பழங்குடி மக்களிடம் அத்துமீறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து விளக்கம் கேட்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். ஆட்சியர் அழைப்பை ஏற்கவில்லை. ராமசுப்பிரமணியம், ``மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்" என்றார்.

அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதைப் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.