Published:Updated:

நிலம் எங்கள் உரிமை: இரண்டரை ஆண்டுக்காலப் போராட்டம்; காடர் பழங்குடிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காடர் பழங்குடி மக்களுக்கு பட்டா
காடர் பழங்குடி மக்களுக்கு பட்டா

கோவை ஆனைமலைப் புலிகள் காப்பகம், காடர் பழங்குடி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அரசு பட்டா வழங்கியிருக்கிறது.

``தண்ணியில இருக்கும் மீனைப் பிடிச்சு தரையில போட்டா அது எப்படித் துடிக்குமோ, அதுபோல காட்டுல இருந்த எங்களை எஸ்டேட் பக்கத்துல தங்கவெச்சு தவிக்கவிடுறாங்க. எல்லோரும் தூங்கறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி எங்க நிலைமையை நினைச்சுப் பாருங்க" என்று கதறிய காடர் இனப் பழங்குடிப் பெண்ணின் குரலைக் கேட்டால் கல்நெஞ்சும் கரைந்து போகும்.
காடர் பழங்குடி
காடர் பழங்குடி
கோரிக்கையை மதிக்காத அரசு; வன உரிமைச் சட்டத்தின் மூலம் காட்டில் குடியேறிய பழங்குடி மக்கள்!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் ஏராளமான பழங்குடிகள் வசித்துவருகின்றனர். அவர்களில் மூத்த பழங்குடிகளான காடர் மக்களின் கல்லாறு கிராமம், கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிதைந்துவிட்டது.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, வனத்தில் வேறு பகுதிக்குக் குடியேறிய காடர்களை, வனச்சட்டத்தைக் காரணம் காட்டி வெளியேற்றியது தமிழக வனத்துறை. பிறகு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக லைன் வீடுகளில் காடர்கள் தங்கவைக்கப்பட்டனர்.

காடர் பழங்குடி
காடர் பழங்குடி

``விரைவில், உங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்" என்று அதிகாரிகள் காடர்களுக்கு நம்பிக்கையளித்தனர். ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு மாற்று இடத்துக்கான பட்டா வழங்கப்படாமல் இருந்துவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெப்பக்குளமேடு பகுதியில் தங்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று காடர் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து, தெப்பக்குளமேடு பகுதியில் நில அளவீடு செய்யும் பணிகள் நடந்தன. ஆனால் அதன் பிறகு ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

காடர் பழங்குடிப் போராட்டம்
காடர் பழங்குடிப் போராட்டம்

கடந்த மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காடர் மக்கள், வன உரிமை சட்டத்தைச் சுட்டிக்காட்டி அவர்களாகவே தெப்பக்குளமேடு பகுதிக்குக் குடியேறினார்கள். காடர் மக்களின் தொடர் போராட்டங்களை விகடனும் மற்ற ஊடகங்களும் வெளியிட்டுவந்தன.

காடர் மக்களின் தொடர் போராட்டங்கள் அரசாங்கத்தின் கதவுகளை ஓங்கித் தட்டின. இந்த நிலையில், தற்போது வன உரிமைச் சட்டத்தின் கீழ் காடர் மக்களுக்கு நில உரிமை பட்டாக்கள் வழங்ப்பட்டிருக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் காடர் மக்களுக்கு பட்டாக்களை வழங்கினார்கள்.

காடர் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் அமைச்சர்
காடர் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் அமைச்சர்

வனமகன்களான பழங்குடிகள், காடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், காடர் மக்களின் போராட்டமும், அதற்குக் கிடைத்த வெற்றியும் பழங்குடி மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு