Published:Updated:

திருவாரூர்: கமலா ஹாரிஸைப் பெருமைப்படுத்த அவரின் பூர்வீகக் கிராமத்தில் தூர் வாரப்பட்ட ஏரி!

துளசேந்திரபுரம்

துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்ற ஆண்டைப் பெருமைப்படுத்தும்விதமாக, சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த ஏரியைத் தூர் வாரி, கரைகளை பலப்படுத்த, சிட்டி யூனியன் வங்கி முன் வந்தது.

திருவாரூர்: கமலா ஹாரிஸைப் பெருமைப்படுத்த அவரின் பூர்வீகக் கிராமத்தில் தூர் வாரப்பட்ட ஏரி!

துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்ற ஆண்டைப் பெருமைப்படுத்தும்விதமாக, சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த ஏரியைத் தூர் வாரி, கரைகளை பலப்படுத்த, சிட்டி யூனியன் வங்கி முன் வந்தது.

Published:Updated:
துளசேந்திரபுரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்றபோது இப்பகுதி மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் திளைத்தார்கள். அதன் ஒரு பகுதியாக இக்கிராமத்தில் நீண்டகாலமாகத் தூர் வாரப்படாமல் இருந்த மிகப்பெரிய ஏரியை, சுமார் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியில் தூர் வாரி, கரைகள் அமைக்க சிட்டி யூனியன் வங்கி முன்வந்தது. இப்பணிகள் சிறப்பாக நடைபெற்றதால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த ஏரியில் முழுமையாக நீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

துளசேந்திரபுரம் ஏரி
துளசேந்திரபுரம் ஏரி

அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டபோதே, துளசேந்திரபுரம் கிராமமக்கள், அவருக்கு வாழ்த்து பேனர்கள் வைத்தும், பட்டாசு வெடித்தும் அவர் வெற்றிபெற, இங்குள்ள இவரது குலத்தெய்வக் கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடத்தியும் அதகளம் செய்தார்கள் கிராம மக்கள். அவர் வெற்றிபெற்றபோதும், அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்ற அன்றும், துளசேந்திரபுரம் கிராமமே உற்சாகத்தில் மூழ்கியது. இப்போது அதன் நீட்சியாக இங்குள்ள ஏரி தூர் வாரப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து இப்பணியை மேற்கொண்ட தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது ”துளசேந்திரபுரம் ஏரியின் மொத்தப் பரப்பு 140 ஏக்கர். மழைக்காலங்களில் இந்த ஏரியில் நிரம்பக்கூடிய தண்ணீரை நம்பி, இப்பகுதியில் உள்ள ஐந்து ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் நேரடியாக சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களும், மறைமுகமாக ஐயாயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெற்று வந்திருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த ஏரி தூர் வாரப்படாததால், மண் மேடாக மாறியதோடு, ஏரி முழுவதும் பரவலாக, காட்டுக்கருவையும், முட்புதர்களும் மண்டி காடுபோல் காட்சி அளித்தது. கரைகளும் முழுமையாக சேதம் அடைந்திருந்தது. இதனால் மழைக்காலங்களில் நீர் தேங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
Andrew Harnik

இந்நிலையில்தான் கமலா ஹாரிஸ், அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்ற ஆண்டைப் பெருமைப்படுத்தும்விதமாக, சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த ஏரியைத் தூர் வாரி, கரைகளை பலப்படுத்த, சிட்டி யூனியன் வங்கி முன்வந்தது. அவ்வங்கியோடு இணைந்து, எங்களது தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கம் இணைய, கடந்த மே, ஜூன் மாதங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இயந்திரங்கள் மூலம் காட்டுக்கருவை, முட்புதர்களை அகற்றினோம். ஒரு அடி அழத்துக்கு மண் எடுத்து, கரைகளை பலப்படுத்தினோம். இப்ப மழை பெய்ய ஆரம்பிச்சதுமே ஏரி முழுக்க பரவலாகத் தண்ணீர் தேங்கிக் காட்சியளிக்கிறது” என்றார்.

நீர் நிறைந்த ஏரி
நீர் நிறைந்த ஏரி

”பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஏரியில் முழுமையாகத் தண்ணீரைப் பார்க்குறோம்” என இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் பைங்காநாடு, ராஜகோபாலபுரம், தலையாமங்கலம், சோழபாண்டி, தென்பாதி, மெய்பழத்தோட்டம், கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரும் உயரும் என உற்சாகமாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism