Published:Updated:

தேனி: ``ஸ்கூலுக்கு பக்கத்துல டாஸ்மாக் வேண்டாம் ப்ளீஸ்..!" - மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்கள் கோரிக்கை

பள்ளி மாணவர்கள் கோரிக்கை
News
பள்ளி மாணவர்கள் கோரிக்கை

மதுபானக்கடை அமைப்பதை எதிர்த்து அந்தப் பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர்கள் தங்கள் கைப்பட எழுதிய அஞ்சல் அட்டைகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருக்கின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி. 58 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்தப் பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, தற்போது தான் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியிருக்கின்றனர்.

ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி
ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி

இந்த நிலையில், கம்பம் நகராட்சிக்குட்பட்ட தேவிபாலா தியேட்டர் சாலையில் மின் மயானத்தை ஒட்டி பள்ளிக்குச் செல்லும் வழியில் புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர், கம்பம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக, ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாரதா மாவட்ட அஆட்சியார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``1963-ம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதியில் இயங்கி வரும் எங்கள் பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், தேவிபாலா தியேட்டர் ரோட்டில் உள்ள மின் மயானத்தை ஒட்டி பள்ளிக்கு செல்லும் சாலையில் புதிதாக மதுபானக்கடை கட்டி வருகிறார்கள். இந்த மதுபானக்கடை அமைந்தால் மாணவர்கள் பாதிப்படைவதோடு, அருகிலிருக்கும் கக்கன்ஜி காலனி, திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதி மக்களும் பாதிப்படைவார்கள்.

கடிதம்
கடிதம்

மேலும், இந்த மதுபானக்கடையால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும். எனவே, கம்பம் தெற்கு காவல்நிலையம் ரோட்டில் அமையவிருக்கும் இந்த மதுபானக்கடையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தி, பள்ளி மாணவர்களும், பகுதி மக்களும் பாதிக்கப்படாத வகையில் வேறு இடத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், மதுபானக்கடை அமைப்பதை எதிர்த்து அந்தப் பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர்கள் தங்கள் கைப்பட எழுதிய அஞ்சல் அட்டைகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருக்கின்றனர். அதேபோல, ``எங்கள் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை வேண்டாம் ப்ளீஸ்!" என வீடியோ மூலமாகவும் மாவட்ட அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் மாணவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் டாஸ்மாக்?
பள்ளிக்குச் செல்லும் வழியில் டாஸ்மாக்?

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து கம்பம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டோம். ``பள்ளியிலிருந்து இது தொடர்பாக மனு அளித்திருந்தார்கள். அவர்கள் கோரிக்கையின் பேரில் அந்தப் பகுதியில் டாஸ்மாக் அமையவிருக்கிறதா என்று விசாரிக்க சொல்லியிருக்கிறோம். பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் அமையவிருப்பது உறுதியானால், கம்பம் நகராட்சி சார்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளிக்கப்படும்" என்றனர்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை அமையவிருக்கும் பட்சத்தில் மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்..!