Published:Updated:

`கலைஞர் குடும்பத்துல பலரும் எனக்குப் பழக்கம்; அதனால..!' - உதயநிதியுடன் சந்திப்பு பற்றி கமீலா நாசர்

உதயநிதியுடன் கமீலா நாசர்...
உதயநிதியுடன் கமீலா நாசர்...

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார் கமீலா நாசர். இதனால், ``கமீலா விரைவில் தி.மு.க-வில் இணையக்கூடும்" என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்தனர். இதுகுறித்து கமீலாவிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் மனைவி கமீலா நாசர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நட்சத்திர முகங்களில் ஒருவராக இருந்தவர். அந்தக் கட்சியின் தொடக்கம் முதலே முக்கிய நிர்வாகியாக இருந்த கமீலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 92,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்தார். சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகினார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், விருகம்பாக்கம் தொகுதியில் கமீலா போட்டியிட விரும்பிய தாகவும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் அந்தக் கட்சியிலிருந்து விலகியதாகவும் பேசப்பட்டது.

உதயநிதியுடன் கமீலா நாசர்...
உதயநிதியுடன் கமீலா நாசர்...
மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமீலா நாசர் ராஜினாமா - காரணம் என்ன?

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்காதவர், ``என் சொந்தப் பணிகள் காரணமாகக் கட்சியிலிருந்து விலகுகிறேன்" என்று அறிக்கை மட்டும் வெளியிட்டார். பின்னர், வேறு எந்தக் கட்சியிலும் இணையாதவர், நேற்று முன்தினம் மாலையில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதனால், ``கமீலா விரைவில் தி.மு.க-வில் இணையக்கூடும்" என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்தனர். இதுகுறித்து கமீலாவிடம் பேசினோம்.

``உதயநிதி தம்பி சின்ன வயசுல இருந்தே எனக்குப் பழக்கம். அவர் மனைவி கிருத்திகா, அத்தை கனிமொழி உட்பட கலைஞர் குடும்பத்துல பலரும் எனக்கு நண்பர்கள்தான். அந்த அன்பும் நட்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானதுமே, என் கணவருடன் நேர்ல போய் ஸ்டாலின் அவர்களைச் சந்திச்சு வாழ்த்துகள் சொன்னோம். மரியாதை நிமித்தமான அந்தச் சந்திப்பின்போது உதயநிதி அங்க இல்ல. அதன் பிறகு, அவரைப் பார்க்க நேரம் அமையல.

ஸ்டாலினுடன் நாசரும் கமீலாவும்...
ஸ்டாலினுடன் நாசரும் கமீலாவும்...
`முடக்கிய விபத்து, விஜய்யின் அன்பு, குடும்பத்தினரின் பாசம்!' - மகன் குறித்து கமீலா நாசர்

அதனாலதான், நேற்று முன்தினம் உதயநிதியைப் பார்த்து, சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்னேன். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான். இந்தச் சந்திப்புல வேறு உள்நோக்கம் எதுவும் இல்ல. இப்ப வரைக்கும் இன்னொரு கட்சியில சேரும் எண்ணம் எனக்கு இல்ல. அப்படியான முடிவை எடுத்தா, அதை வெளிப்படையா எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்" என்று முடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு