Published:Updated:

திருவள்ளூர்: திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள் - நோய் பாதிப்பு அபாயத்தில் பொதுமக்கள்!

சுகாதார சீர்கேடு
News
சுகாதார சீர்கேடு

கடைக்காரர்களும் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுப்பதில்லை, அதைச் சேகரிக்கும் பணியாளர்களும் தரம் பிரித்து வாங்குவதில்லை.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட கனகம்மா சத்திரத்திலிருக்கும் பஜாரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கிவருகின்றன. இந்தக் கடைகளிலிருந்து தினமும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் கொட்டப்படுகின்றன.

கடைக்காரர்களும் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுப்பதில்லை, அதைச் சேகரிக்கும் பணியாளர்களும் தரம் பிரித்து வாங்குவதில்லை. அதனால், குப்பைகளைத் தரம் பிரிக்காமல் நெடுஞ்சாலைக்கு அருகில் குவியலாகக் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அதனால், அங்கு இறைச்சிக் கடைகளிலிருந்து கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. அண்மையில் பெய்த கனமழையின் காரணமாகக் குப்பைகளுடன் வெள்ளநீரும் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. அந்தக் குப்பைக் குவியல்களின் அருகிலேயே தள்ளுவண்டிகளில் சிற்றுண்டிக் கடைகள் செயல்படுவதால், அந்தக் கடைகளில் உணவுப்பொருள்கள் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி உண்பவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

சுகாதார சீர்கேடு
சுகாதார சீர்கேடு

இது தொடர்பாக அந்தப் பகுதியில் கடை நடத்திக்கொண்டிருக்கும் ஒருவர் நம்மிடம் பேசினார். ``இந்தக் குப்பைக் குவியல்களில் வீசும் துர்நாற்றம் காரணமாக மக்கள் என் கடையில் உணவுப்பொருள்கள் வாங்குவதற்கே தயங்குகிறார்கள். இதுவரை வாடிக்கையாக உணவருந்த வந்துகொண்டிருந்தவர்கள்கூட இந்தச் சுகாதாரச் சீர்கேட்டால் கடைக்கு வருவதில்லை. இதனால், வியாபாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது" என்றார் விரக்தியுடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், அந்தக் குப்பை குவியல்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டிருப்பதால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வதற்கே அச்சப்படுவதாகவும், அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.