Published:Updated:

கைத்தறி பட்டுப்புடவையில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் படங்கள்! அசத்திய காஞ்சி தம்பதியர்

ஸ்டாலின் படம் பதித்த வேட்டி

`அவரும் நானும்' புத்தகம் 400 பக்கம்ங்கிறதால முழு புத்தகத்தையும் பதிக்க முடியாது. அதனால புடவையோட ஒரு புறத்தில் `அவரும் நானும்' புத்தக அட்டைப்படமும் மறுபக்கம் புத்தகத்தோட முக்கியமான பகுதிகளை எடுத்து 1,400 வரிகள் வர்ற மாதிரி வடிவமைச்சோம்.

கைத்தறி பட்டுப்புடவையில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் படங்கள்! அசத்திய காஞ்சி தம்பதியர்

`அவரும் நானும்' புத்தகம் 400 பக்கம்ங்கிறதால முழு புத்தகத்தையும் பதிக்க முடியாது. அதனால புடவையோட ஒரு புறத்தில் `அவரும் நானும்' புத்தக அட்டைப்படமும் மறுபக்கம் புத்தகத்தோட முக்கியமான பகுதிகளை எடுத்து 1,400 வரிகள் வர்ற மாதிரி வடிவமைச்சோம்.

Published:Updated:
ஸ்டாலின் படம் பதித்த வேட்டி

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாள தம்பதியர் குமரவேல் - கலையரசி ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் படங்கள் பதித்த கைத்தறிப் பட்டுப்புடவையை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு மு.க.ஸ்டாலினுக்கு பரிசளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட பட்டு வேட்டி, அங்க வஸ்திரம் மற்றும் துர்கா ஸ்டாலினுக்காகத் தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவை ஆகியவற்றின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. இதன் உருவாக்கம் குறித்து தன் கணவரோடு இணைந்து பணியாற்றிய கலையரசியிடம் கேட்டோம்...

குமரவேல் - கலையரசி
குமரவேல் - கலையரசி

``என்னோட கணவர் குமரவேல் நெசவாளர் பின்புலத்தைச் சேர்ந்தவர். கைத்தறி நெசவுக்கான வடிவமைப்புகளைப் பண்ணுவார். நான் பி.எஸ்ஸி, பி.எட் படிச்சிருக்கேன். திருமணத்துக்கப்புறம் அவரோட சேர்ந்து நானும் வடிவமைப்பைக் கத்துக்கிட்டேன். தி.மு.க-வைச் சேர்ந்த சிம்லா முத்துச்சோழன், துர்கா ஸ்டாலின் எழுதின `அவரும் நானும்' அட்டைப்படத்தையும், அந்தப் புத்தகத்துல உள்ள எழுத்துகளையும் பதிச்சு ஒரு பட்டுப்புடவை, `உங்களில் ஒருவன்' `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்பது போன்ற வாசகங்கள் பதிச்ச பட்டு வேட்டி, முதல்வருடைய இளமைக்கால புகைப்படங்கள் பதிச்ச பட்டு அங்கவஸ்திரம் நெய்து தரணும்னு சொன்னாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அவரும் நானும்' புத்தகம் 400 பக்கங்கள்ங்கிறதால முழு புத்தகத்தையும் பதிக்க முடியாது. அதனால புடவையோட ஒரு புறத்தில் `அவரும் நானும்' புத்தக அட்டைப்படமும் மறுபக்கம் புத்தகத்தோட முக்கியமான பகுதிகளை எடுத்து 1,400 வரிகள் வர்ற மாதிரியும் வடிவமைச்சோம். பட்டு வேட்டி, அங்க வஸ்திரத்துல அவங்க கேட்டபடியே சில வாசகங்கள், முதல்வரோட படங்கள் பதிச்சு வடிவமைச்சோம்.

பட்டுப்புடவை
பட்டுப்புடவை

4 நெசவாளர்களை வெச்சு இதை நெய்து முடிக்க 2 மாதங்கள் ஆச்சு. சாதா ஜாக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் கம்ப்யூட்டர்ல டிசைன் பண்ணி அதை பஞ்ச் கார்டா மாத்தி ஜாக்காட்ல போடுவோம். ஜாக்காட்னா டிசைனுக்கேத்தபடி நூலைத் தனியா பிரிச்சுக்கொடுக்கிற முறை. எலெக்ட்ரானிக் ஜாக்காட்ல பஞ்ச் கார்டு போடத் தேவையில்லை பென்டிரைவ் மூலமாவே டிசைன் கொடுத்திடலாம். இதுல ரெண்டு விதங்களையும் பயன்படுத்தி யிருக்கோம். எல்லாமே கைத்தறிதான். அவங்க கேட்டுக் கிட்டபடியே தயாரிச்சுக் கொடுத்ததுல ரொம்பவும் மகிழ்ச்சியும் நிறைவுமா எங்களைப் பாராட்டினாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெய்த எல்லோருக்கும் பேசின தொகைக்கும் மேல பணமும் தட்டு நிறைய பழங்களும் வெச்சுக் கொடுத்தாங்க. அது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருந்தது" என்கிறார் கலையரசி.

அடுத்ததாகப் பேசிய அவர் கணவர் குமரவேல், இதற்கு முன்பு அத்தி வரதர், திருப்பாவை உள்ளிட்டவற்றையும் வடிவமைத்து நெய்ததாகக் கூறுகிறார்.

திருப்பாவை
திருப்பாவை

``திருப்பாவையில இடம்பெற்றுள்ள 30 பாசுரங்களை 33 முழத்துல பட்டுப்புடவையா நெய்தோம். அத்திவரதர் தரிசனம் தந்த 46வது நாள் அவருடைய திருவுருவம் பதிச்ச வேட்டியை அவருக்குச் சாத்தினோம். அதைப் பார்த்துட்டு திருப்பதி வெங்கடாஜலபதியின் திருவுருவம் பதிச்ச வேட்டி வேணும்னு கேட்டிருந்தாங்க. அதையும் வடிவமைச்சு நெய்து தந்தோம். வாடிக்கையாளர்கள் என்ன கேட்கிறாங்களோ அதைக் கைத்தறியில வடிவமைச்சு நெய்து கொடுக்கிறோம். பெரும்பாலும் தம்பதியரின் புகைப்படங்கள் பதிச்ச பட்டுப்புடவைகளுக்கான ஆர்டர்தான் அதிகம் வருது" என்கிறார் குமரவேல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism