Published:Updated:

கோவை: `விவசாயம், சந்தை மாநில அதிகாரத்துக்குட்பட்டவை; மத்திய அரசுக்கு உரிமை இல்லை' கனிமொழி காட்டம்!

கனிமொழி
கனிமொழி

மத்திய வேளாண் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், தி.மு.க எம்.பி கனிமொழி, மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாகச் சாடினார்.

மத்திய வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில், தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார். அப்போது பேசிய கனிமொழி, ``விவசாயிகளை அழைத்துப் பேசாமல், தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், அந்த விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சட்டத்துக்கான விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே, மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டார்.

கனிமொழி
கனிமொழி
`ட்ரெண்டிங்' கனிமொழி... `டேட்டா' பிரசாந்த் கிஷோர் மீது கடுப்பில் ஸ்டாலின்?!

எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்தச் சட்டங்களை அவர்கள் நிறைவேற்றினார்கள். அந்த மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்ற அப்படி என்ன அவசரம், அப்படி என்ன அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். `விவசாயி, விவசாயி’ என்று பச்சைத்துண்டை கட்டிக் கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமிதான் இந்தச் சட்டத்தை ஆதரித்தார்.

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா காலில் விழுந்து மந்திரி பதவி வாங்கினார். சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கினார். இப்போது, மோடி, அமித் ஷா கால்களில் விழுந்து தனது பதவியை தக்கவைத்துவருகிறார். இந்த ஆட்சியை எதிர்த்து, யாரும் கேள்வி கேட்கக் கூடாது. போராடக் கூடாது. தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விஷயத்தை டி.வி-யில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாக எடப்பாடி கூறினார்.

கனிமொழி
கனிமொழி

பிறகு எதற்கு உங்களுக்கு இந்தப் பதவி? இந்த வேளாண் சட்டங்கள் மூலம், அடிப்படை ஆதார விலை இல்லாமல் போய்விடும். இவர்கள் சொல்வதைப்போல, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் போடுவது நடப்பு சூழ்நிலைகளுக்குச் சரிவராது.

விவசாயிகள், எதைப் பயிரிட வேண்டும் என்பதை கார்ப்பரேட்கள் முடிவெடுக்கும் என்றால், இங்கே என்ன உணவு பாதுகாப்பு இருக்கிறது... நமக்கு அத்தியாவசியப் பொருள்களான, வெங்காயம், உருளைக்கிழங்கு, எண்ணெய் வித்துகள் போன்ற பொருள்களை யார் வேண்டுமானாலும் பதுக்கி வைத்துக்கொள்ளலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. அவர்கள் வைப்பதுதான் சட்டம். அவர்கள் சொல்லும் விலைக்குத்தான், நாம் வாங்க வேண்டும்.

கனிமொழி
கனிமொழி

இது விவசாயிகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் எதிரான சட்டம். விவசாயம், சந்தை மாநில அதிகாரத்துக்குட்டது. இதைப் பற்றி சட்டம் போட மத்திய அரசுக்கு உரிமை இல்லை. மாநில அரசின் உரிமையில் தலையிட்டு, சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க தைரியமில்லாத ஆட்சி, பழனிசாமி ஆட்சி” என்று குற்றம்சாட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு